ஷாரூக்கும் மகனும் 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல்...!

மும்பை: பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பது ரசிகர்களை கவர்வதற்காக.

அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு...

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன் வந்திருக்கிறார்கள்.

மகனும் ஷாரூக்கும்

மகனும் ஷாரூக்கும்

தற்போது டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். அவர் மட்டும் இல்லாமல் அவரது மகன் ஆர்யனும் முன்னணி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்கிறார்.

ஆர்யன் யாருக்கு

ஆர்யன் யாருக்கு

பாலிவுட்டின் கிங் ஷாரூக் கான், தி கிங் ஆஃப் தி ஜங்கிள் - Lion முஃபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முஃபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார்.

இயக்குநர் ஜான்

இயக்குநர் ஜான்

காலத்தால் அழியாத ஜங்கிள் புக் படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகி இருக்கும் லைவ் ஆக்ஷன் படமான 'The Lion King', வரும் ஜூலை 19, 2019-ல் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

மகனும் அப்பாவும்

மகனும் அப்பாவும்

இந்த அப்படத்துக்கு டப்பிங் கொடுக்கும் போது ஷாரூக் செம ஜாலி மூடில் இருந்தாராம். மகனுக்கும் தனக்கும் ஒரு போட்டியே வந்தது டப்பிங் கொடுக்கும்போது என்று ஜாலியா சொல்றார். மனிதர் எப்போதுமே ஜாலி மூடிலிருப்பார். மகன் கூட வேலை பார்க்கிறோம் எனும்போது கூடுதல் உற்சாகம் வந்ததாம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X