For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்!அது எப்படி முடியும்?அதிர்ச்சியில் ரசிகர்கள்

  |

  சென்னை : விஜய் டிவி ஒளிபரப்பாகும் டாப் ரேட்டிங் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. குடும்ப சென்டிமென்ட், அண்ணன்-தம்பி பாசம், கூட்டு குடும்ப பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சீரியல்.

  Recommended Video

  Bhakyalakshmi | விவாகரத்து.. கொடுக்க முடிவெடுத்த Bakiya, என்ன இப்படி ஆயிடுச்சு! *TV

  ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், திங்கள் முதல் சனி வரை இரவு 8 - 8.30 வரை ஒளிப்பரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் வீட்டில் இருந்து வெளியேறும் கதிர், புதிதாக ஓட்டல் துவங்குகிறார். முதல் நாளில் வியாபாரம் சரியாக நடக்காமல், நஷ்டம் ஏற்படுகிறது.

  இதை சொல்லிக்காட்டி, சவால் விடுகிறாள் முல்லையின் அக்கா மல்லி. கதிரும் பதிலுக்கு சவால் விடுகிறார்.அந்த பக்கம் ஐஸ்வர்யா புதிதாக ப்யூட்டி பார்லர் துவங்கும் முயற்சியில் இறங்குகிறார்.இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

  6 மொழிகள்.. 232 படங்கள்.. 4 தேசிய விருதுகள்.. கலையின் நாயகன் கமல்ஹாசனின் 63 ஆண்டுகால திரைப்பயணம்! 6 மொழிகள்.. 232 படங்கள்.. 4 தேசிய விருதுகள்.. கலையின் நாயகன் கமல்ஹாசனின் 63 ஆண்டுகால திரைப்பயணம்!

  அடுத்த சண்டை வர போகுதா?

  அடுத்த சண்டை வர போகுதா?

  எப்படியும் ஐஸ்வர்யா ப்யூட்டி பார்லர் துவங்க உள்ளதை வைத்து மீனா சண்டை போடுவார். அதற்கு பிறகு தானும் தனது பங்கிற்கு ஏதாவது செய்கிறேன் என கமிறங்குவார். வீட்டில் அடுத்த சண்டை காத்திருக்கிறது. இதை வைத்தே எப்படியும் ஒரு மாதம் ஓட்டுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றில் சீரியலில் நடக்க போகிறது.

  திடீரென மாற்றப்பட்ட கதை

  திடீரென மாற்றப்பட்ட கதை

  இந்த சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக லட்சுமி என்ற ரோலில் சீரியல் தொடங்கிய ஆண்டிலிருந்து நடிகை ஷீலா நடித்து வந்தார். இவர் நடிகர் விக்ராந்தின் தாயார் ஆவார்.சில மாதங்களுக்கு முன்பு சீரியலில் திடீர் திருப்பமாக இவர் இறப்பது போல கதை மாற்றப்பட்டது. இந்த காட்சிகள் ரசிகர்களை சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியது.

  பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி

  பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி

  அவரது இறப்பு மற்றும் இறுதி சடங்கு காட்சிகள் கிட்டத்தட்ட 1 வாரம் வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை உணர்ச்சிமயமாக ஆக்கியது நினைவிருக்கலாம். இதனால் அந்த மாதத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டி.ஆர்.பியிலும் முதல் இடத்தை பிடித்து இருந்தது.பின்னர், ஷீலா பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக என்ட்ரி கொடுத்தார்.

  என்னது மறுபடியும் வராறா?

  என்னது மறுபடியும் வராறா?

  தொடர்ந்து அந்த சீரியலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென்று இவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனத்துடன் சேர்ந்து லட்சுமி அம்மாவான ஷீலா எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  அது எப்படி முடியும்?

  அது எப்படி முடியும்?

  இதனை பார்த்த ரசிகர்கள் இறந்தவர் எப்படி மீண்டும் வருவார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியலில் லட்சுமி அம்மா இறந்தாலும் அவர் அடிக்கடி தனத்தின் கனவில் வந்து பேசுவது போல் காட்சிகள் சீரியலில் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் மீண்டும் லட்சுமி அம்மாவாக ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்களின் கனவில் வந்து பேச போகிறார் போல. அதற்கான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு இருக்கும் என கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

  English summary
  Recently Pandian stores Dhanam along with Lakshmi amma alis Sheela photo goes viral in social media. According to sources, Lakshmi amma will come back to Pandian stores serial. Fans shocked on this info.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X