லட்சுமி அம்மா மரண காட்சியில் நடிச்சது பொம்மையா?... கடுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்த சீரியலில் கடந்த இரண்டு மாசமா கண்ணனின் கல்யாணம், லட்சுமி அம்மாவின் இறப்பு என டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டு இருக்கிறது.
மரணக் காட்சியில் நடித்த ஷீலாவுக்கு பலதரப்பிலிருந்து பாராட்டு குவிந்து வரும் நிலையில், பாடையில் இருந்தது அவங்க இல்லை பொம்மை என்ற செய்தி வைரலானது. இதனால் கடுப்பான ஹேமா ரசிகர்களுக்கு உரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியலில் ஒன்றாகும். குடும்பம் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை இந்த சீரியலில் இயல்பாக காட்டப்பட்டு இருக்கும். சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏராளமான ரசிகர்கள்
அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ரகசிய திருமணம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பி கண்ணன் உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவை காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். இதனால், கண்ணனை அந்த குடும்பமே ஒதுக்கி வைக்கிறது. இதையடுத்து, கண்ணனின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

எல்லாமே டூப்பா
தாய் இறந்த சோகத்தில் இருந்த கண்ணன் கதறி அழுதைப்பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர் அந்தகாட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. இதையடுத்து, இறப்பு காட்சியில் நடித்த ஷீலாவுக்கு படக்குழுவினரால் திருஷ்டியும் எடுக்கப்பட்டது. இதையடுத்து, இறப்பு காட்சிகளில் ஷீலா நடிக்கவில்லை என்றும், டூப்பாக பொம்மை பயன்படுத்தப்பட்டது என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை ஹேமா ஒரு வீடியோ கூறியிருந்தார், அப்படியானால், இறப்பு காட்சிகளில் முழுவதுமாக ஷீலா நடிக்கவில்லையா? பொம்மைதானா என்று ரசிகர்கள் பேசி வந்தனர்.

ஒரு சில காட்சிகளில்
இதற்கு கடுப்பான ஹேமா, ஒரு கலைஞரின் உழைப்பை ஏன் இப்படி கொச்சைப்படுத்துறீங்க? இப்படி எல்லாம் தப்பாக பேசாதீர்கள். ஷீலா தான் பெரும்பாலும் காட்சிகளில் நடிச்சாங்க, அனைத்து காட்சிகளிலும் அவங்களே நடிச்சாங்க. பொம்மை ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











