வனிதா சொன்ன அந்த 'ஒத்த வார்த்தை..'' நொறுங்கிப் போன ஷெரின்! கண்ணீர் விட்டு கதறல்!!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கூறிய ஒத்தை வார்த்தையால் உடைந்துபோன ஷெரின் கண்ணீர்விட்டு கதறுகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ள வனிதா ஒவ்வொரு வாரமும் ஒருவரை டார்கெட் செய்து அழ வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று தர்ஷனுடனான உறவை கைவிடும்படி ஷெரினுக்கு அட்வைஸ் செய்தார் வனிதா.
அப்போது, ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் இருப்பதாக கூறினார். இதனைக் கேட்டு ஷாக்கான ஷெரின், வனிதாவை வெளுத்து வாங்கினார். உனக்கு அறிவு இல்லையா, ஒரு ரிலேஷன்ஷிப்பை எப்படி அஃபையர் என்று கூறலாம் உனக்கு என்ன தைரியம் என்று கேட்டு ஏறு ஏறு என ஏறினார்.

அதிர்ந்த வீடு
மேலும் உன்னை என்னடா செய்தேன் என்று தர்ஷனிடமும் நியாயம் கேட்டார் ஷெரின். ஷெரினின் கோபத்தால் அதிர்ந்துபோனது பிக்பாஸ் வீடு.

கதறும் ஷெரின்
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரின், சேரனிடம் கதறி அழுகிறார். ''அந்த மாதிரி வார்த்தையை எப்படி யூஸ் பண்ணலாம் சார்? நான் எப்படி சார் சும்மா இருக்க முடியும்?

தாங்க முடியல சார்
எனக்கு அந்த பையனோடையும் பேச வேண்டாம் வனிதாவுடனும் பேச வேண்டாம், எனக்கு வீட்டில் யாருடனும் பேச வேண்டாம் சார். அந்த மாதிரி வார்த்தையை யூஸ் பண்ணது என்னால தாங்க முடியால சார்.

காயப்படுத்திடுச்சு
வேற ஒருத்தங்க வாயில இருந்து அந்த வார்த்தை வந்திருந்தாக்கூட பரவாயில்லை, என்னோட பிரன்ட்டா இருந்துக்கிட்டு இப்படி ஒரு வார்த்தை சொன்னது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு சார்." இவ்வாறு சேரனிடம் கண்ணீர்விட்டு அழுகிறார் ஷெரின்.

சேரன் ஆறுதல்
கதறும் ஷெரினுக்கு சேரன் மட்டுமே கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறுகிறார். ஒருபுறம் தர்ஷனும் துக்கம் தொண்டையை அடைக்க கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு ஃபீல் பண்ணுகிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











