Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இங்கே தான் டிவிஸ்ட்டே இருக்கு.. ஷெரின் இருப்பது தெரியாமல் பேசிய லாஸ்லியா.. என்னல்லாம் நடக்கப்போகுதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா தர்ஷனிடம் பேசுவதை பாத்ரூமில் இருந்தபடியே கேட்டுவிட்டார் ஷெரின். இன்று என்னல்லாம் நடக்கப்போகிறதோ?
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, சேரன், மதுமிதா உள்ளிட்ட சிலர் மட்டுமே புரணி பேசாமல் கண்ணியமாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தர்ஷன் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
மிகவும் நேர்மையாக உள்ளார் தர்ஷன். யார் குறித்தும் பின்னாடி பேசாமல், நேருக்கு நேராக பேசுவதோடு, தப்பென படுவதை டப்பென் கேட்டுவருகிறார். வனிதாவை அவர் கையாண்ட விதம் ரசிகர்களிடம் பாராட்டை பெற வைத்தது.
ஹார்ட்டின் சப்பாத்தி
அதேநேரத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின், தர்ஷனிடம் நெருங்கி பழகி வருகிறார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் இதய வடிவில் போடப்பட்ட சப்பாத்தியை லாஸ்லியாவிடம் காண்பித்து உன் பிரதருக்கு போடப்பட்ட ஹார்ட்டின் சப்பாத்தியை பார்த்தாயா என கேட்கிறார்.
யாரு யாருக்கு போட்டது?
அதனை பார்த்த லாஸ்லியா அந்த இதய வடிவிலான சப்பாத்தியை கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதனால் ஷாக்கான ஷெரின், வாட் த ஹெல்? வாட்ஸ் ராங் வித் ஹர் என கத்துகிறார். ஆனால் அந்த சப்பாத்தி ஷெரின் தர்ஷனுக்கு போட்டதா? இல்லை சாக்ஷி கவினுக்கு போட்டதா என தெரியவில்லை. ஆனால் சாக்ஷியும் ஷாக்காகிறார்.
தர்ஷன் அட்வைஸ்
இதைத்தொடர்ந்து பாத்ரூமில் லாஸ்லியா கிளீன் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் சேரனும் இருக்கிறார். அப்போது தர்ஷன், நீ ஏன் அப்படி செய்தாய்? அப்படி செய்யாதே என அட்வைஸ் கூறுகிறார்.
எல்லாத்தையும் கேட்ட ஷெரின்
ஆனால் லாஸ்லியாவோ நான் அப்படிதான் செய்வேன் இன்னொரு சப்பாத்தி செய்தாலும் அதையும் அப்படிதான் செய்வேன் என்றார். வெளியில் நடந்த அனைத்தையும் பாத்ரூமுக்குள் இருந்தபடியே கேட்ட ஷெரின், திடீரென கதவை திறந்துக்கொண்டு வெளியே வருகிறார்.
இன்று இரவு தெரியும்
அப்போது லாஸ்லியா ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை என கூறுகிறார் ஷெரின். ஷெரின் பாத்ரூமை விட்டு வெளியே சென்ற பிறகுதான் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். ஷெரின் தர்ஷனுக்கு போட்ட சப்பாத்தியை லாஸ்லியா கிழித்திருந்தால் தப்பித்துவிடுவார்.ஆனால் சாக்ஷி கவினுக்காக போட்ட சப்பாத்தியை கிழித்திருந்தால் அவ்வளவுதான். என்ன நடக்கப்போகிறதோ இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
|
நான் நினைத்தேன்
ஆனால் லாஸ்லியா சப்பாத்தியை கிழித்ததை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சூப்பர் லாஸ்லியா டார்லிங், நான் செய்யனும்னு நினைத்ததை நீ செய்துவிட்டாய் என்று தெரிவித்துள்ளார்.