twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஷெரின் அம்மா.. வேற லெவல்.. கலகலத்த பிக்பாஸ் வீடு!

    |

    Recommended Video

    Bigg Boss Tamil : Promo 3: Sherin Family visit in BB House

    சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்த ஷெரினின் அம்மா தனது மகளுக்கு உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்தார்.

    தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். தொடர்ந்து விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, ஜெயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி, மலையாளம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை ஷெரின். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஷெரின்.

    சங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் - பாடல் ரிலீஸ்சங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் - பாடல் ரிலீஸ்

    ஷெரின் அம்மா தோழி

    ஷெரின் அம்மா தோழி

    நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று ஷெரினின் அம்மா மற்றும் அவரது தோழி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

    சேரன் காலில் விழப்போனார்

    சேரன் காலில் விழப்போனார்

    அப்போது தனது மகளை கட்டியணைத்து வாயில் வாய் வைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார். ஷெரினும் தனது தாய்க்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். மிகவும் ஜாலியான அம்மாவாக காணப்பட்ட ஷெரினின் அம்மா, சேரனின் காலில் விழப்போனார்.

    அபியை வம்புக்கிழுத்தார்

    அபியை வம்புக்கிழுத்தார்

    ஆனால் சேரன் அதனை தடுத்துவிட்டார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களை மரண கலாய் கலாய்த்தார் வேற லெவலில் அதகளப்படுத்தினார். போதா குறைக்கு முகெனை கலாய்த்த அவர் அபிராமியையும் வம்புக்கு இழுத்தார்.

    பிராக்டிக்கல் மதர்

    பிராக்டிக்கல் மதர்

    ஷெரினை டார்ச்சர் செய்கிறாய் என சாண்டியிடம் செல்ல கோபம் காட்டிய அவர், லாலாவை அமெரிக்காவுக்கு தூக்கி சென்றுவிடுவேன் என மிரட்டினார். மற்றவர்களை போல் அழாமல் மிகவும் பிராக்டிகலாக நடந்துகொண்டார் ஷெரினின் அம்மா. இதனால் நேற்றைய எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் ஷெரினின் அம்மாவை புகழ்ந்து தள்ளினர்.

    அப்பறம் ஒரு மேட்டர்.. சாண்டியுடன் டான்ஸ் ஆடிய ஷெரீன் அம்மா நடனத்திலும் கலக்கினார்.. கடைசியில் சாண்டி அவரை அலேக்காக தூக்கி அதகளப்படுத்தியது தனி வரலாறு பாஸ்!

    English summary
    Actress Sherin Mother came to Biggboss house yesterday. She kissed her daughter on lip to lip.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X