எப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க!! நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷெரினின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இமேஜ் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் கடந்த ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்டிரிகளும் இருந்தன.
கடந்த இரண்டு சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். சண்டை, சச்சரவு, சர்ச்சை, காதல், கடலை, ஏமாற்றம், அழுகை, சிரிப்பு என அனைத்தும் கலந்திருந்தது இந்த சீசனில்.

பிக்பாஸ் சீசன் 3
நடிகைகள் வனிதா, மதுமிதா, ஷெரின், ரேஷ்மா, அபிராமி, சாக்ஷி, இயக்குநர் சேரன், நடிகர் சரவணன், நடன இயக்குனர் சாண்டி, சீரியல் நடிகர் கவின், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, இலங்கை மாடல் தர்ஷன் மலேசிய சிங்கர் முகென் என 15 பேருடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.

விட்ட இடத்தை பிடிக்க
இதில் பங்கேற்ற பலரும் ஏதோ ஒரு விதத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தனர். மீண்டும் திரைத்துறையில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்றும், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் இன்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை கிரான்ட் பினாலேவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்றைய எபிசோடில் ஃபைனனலுக்கு தகுதி பெற்ற நான்கு போட்டியார்களை சந்தித்த கமல்ஹாசன், ஷெரினுக்கு ஒரு படத்தை காண்பித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நம்பதா ஷெரின்
அதாவது ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எப்படி இருந்தார் தற்போது எப்படி உள்ளார் என்ற ட்ராஸ்பர்மேஷன்தான் அந்த போட்டோ. அந்த போட்டோவை பார்த்த ஷெரினால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.
நான் இல்லை
தனது பழைய போட்டோவை பார்த்த அவர், அது யாரோ என்று நினைத்தார். இதை கமலிடமும் கூறிய ஷெரின், நிச்சயமாக அது தானா இருக்க முடியாது என்றார்.
ஏஞ்சல் ஷெரின்
பழைய போட்டோவில், அதாவது, பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஷெரின் மிகவும் குண்டாகவும் வயது முதிர்ச்சியுடனும் காணப்பட்டார். ஆனால் இப்போது அழகு பதுமையாக ஏஞ்சல் போன்று மாறிவிட்டார்.
வைரலாகும் போட்டோ
இந்நிலையில் ஷெரினின் பிக்பாஸ் வீட்டில் இருந்த முதல் நாள் போட்டோவையும் தற்போதுள்ள போட்டோவையும் வைரலாக்கி வரும் நெட்டிசன்ஸ் ட்ராஸ்ஃபர்மேஷன் வேறலெவல் என டிவிட்டி வருகின்றனர். மேலும் ஷெரின் நிச்சயம் பழைபடி சினிமாவில் ஷைன் ஆவார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











