யாருக்கா இருக்கும்? கடிதம் எழுதிய ஷெரின்.. கோர்த்துவிட்ட பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகளாக கடந்த சீசனில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தும் மகத்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது இன்று வெளியான முதல் புரமோவில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவில் கெஸ்ட்டை வைத்து தர்ஷனை ராஜாவாக்கினார் பிக்பாஸ். ஆனால் அந்த புரமோ ஒன்றும் அந்த அளவுக்கு எடுபடவில்லை.

மூன்றாவது புரமோ
இதெல்லாம் ஒரு புரமோவா என திட்டி தீர்த்துவிட்டனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பெயரை குறிப்பிட வேண்டாம்
அதில் ஷெரினை கடிதம் எழுதுமாறு கூறுகின்றனர் மகத்தும் யாஷிகாவும். மேலும் நீங்கள் எழுதும் கடிதம் டெலிகாஸ்ட்டாகாது என்றும் யாருக்கு எழுதுகிறீர்கள் என்று பெயரை கூட குறிப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

பிக்பாஸ் கட்டளை
இதனை நம்பி ஷெரினும் கடிதம் எழுதினார். ஆனால் அதனை ஷெரின் யாருக்கு எழுதினாரோ, அவரிடம் கொடுக்க வைத்துவிட்டு போங்கள் என்று மகத்துக்கும் யாஷிகாவுக்கும் கட்டளையிடுகிறார் பிக்பாஸ்.

கடிதத்தை கிழத்த ஷெரின்
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷெரின் அந்த கடிதத்தை எடுத்து சுக்கு சுக்காக கிழித்து குப்பைத்தொட்டியில் போடுகிறார். வேண்டாம் என்று அவர்கள் கூறும் போது தனது கடிதத்தை கிழித்துவிட்டார் ஷெரின்.

யாருக்கா இருக்கும்?
இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒருவருக்குதான் ஷெரின் கடிதம் எழுதியிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. வேறு யாருக்கு எழுதியிருப்பார், நிச்சயமாக தர்ஷனுக்கு தான் ஷெரின் கடிதம் எழுதியிருப்பார்.
இப்படி பண்ணிட்டீங்களே?
இந்நிலையில் ஷெரின் ஆங்கிலத்தில் எழுதிய அந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒளிபரப்ப மாட்டோம் என்று கூறிவிட்டு இப்படி செஞ்சிட்டிங்களே பிக்பாஸ் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











