ஷிவாங்கிக்கு கூடவா இப்படி நடந்துச்சு.. உச்சு கொட்டும் ரசிகர்கள்

சென்னை: கலகலப்பாக எப்போதுமே பேசி சிரித்து கொண்டிருக்கும் ஷிவாங்கிக்கு இந்த மாதிரி கூட நடந்திருக்கா என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்...

குழந்தைத்தனமாக இருக்கும் பெண்களை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. சினிமாக்களாக இருந்தாலும் சரி நிஜ வாழ்க்கையில் ஆக இருந்தாலும் சரி அந்த மாதிரி பெண்களை தான் பலரும் ரசிக்கிறார்கள்.

அதுவும் தற்போது ஷிவாங்கியின் பெயரை கேட்டதுமே அனைவருக்கும் குஷியாகி விடுகிற அளவில் ஒரு குழந்தைத்தனமான முகத்தை வைத்துக் கொண்டு அனைவரையும் குழந்தைபோல என்ஜாய் பண்ணி கொண்டிருக்கும் சுட்டி குழந்தை தான்.

செல்ல ஷிவாங்கி

செல்ல ஷிவாங்கி

தற்போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேசியிருப்பது கேட்டதும் ஷாக் ஆகிப் போன ரசிகர்கள் இந்த மாதிரி நடந்திருக்கிறதா என வருத்தத்துடன் அவருக்கு ஆறுதல் கூறி வந்துகொண்டிருக்கின்றன. தற்போது டிரண்டாக இருக்கும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் வலம் வந்து கொண்டிருக்கிறது .

ரசனைக்காரர்

ரசனைக்காரர்

அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி என சொன்னதுமே அனைவருக்கும் குழந்தையை ரசிக்கும் ரசிகர்களைப் போலவே இவரையும் ரசித்து வருகின்றனர். இவரோட அடாவடித்தனத்தையும் குறும்பையும் ரசிக்காத ரசிகர்களே இல்லை. இவர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட அழகான ராட்சசி ஆக இருந்து வருகிறார்.

அப்பா அம்மாவும் இசையும்

அப்பா அம்மாவும் இசையும்

இவருடைய தந்தை மியூசிக்கில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல பத்மஸ்ரீ விருதும் வாங்கியிருக்கிறார். அவரது தாயும் அவருக்கு சளைக்காமல் ஒரு கர்நாடக இசை ஆசிரியராகவும் இருந்து வருகிறார் .அதனால்தானோ என்னவோ ஷிவாங்கியும் அசால்டாக பாடல்களில் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

கோமாளித்தனம்

கோமாளித்தனம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே இவர் பள்ளிப் படித்துக்கொண்டிருக்கும்போது சூப்பர் சிங்கர் ஆடிஷன் இல் கலந்துகொள்ள இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பு இவருக்கு சரியாக பயன் பட வே தேர்வு செய்யப்பட்டார் .இவருடைய க்யூட்டான எக்பிரஸனை பார்த்து அசந்துபோன ஜட்ஜஸ் இவரை தேர்ந்தெடுத்து இருந்தாலும் இவர் உண்ணிகிருஷ்ணன், அனுராதா அணியில் இடம் பிடித்திருந்தார் .

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் இவரால் அரை இறுதி வரை தான் நீடிக்க முடிந்தது. போட்டியாளர்கள் இடையில் இருந்த கடும் போட்டியால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். ஆனாலும் மீண்டும் இவர் ஒரு பின்னணி பாடகி திரும்பி வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் டோட்டல் ஆக மாறி விட்டார். பாடகியாக ஜொலிக்க முடியாவிட்டாலும் ஒரு மாற்றத்திற்காக அதே விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் இவர் வனிதா விஜயகுமார் உடன் ஜோடி சேர்ந்தார்.

கோமாளி சாம்பியன்

கோமாளி சாம்பியன்

அவர்கள் இருவரும் குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் பட்டத்தை வென்று இருந்தனர். அதன்பிறகு தொடர்ந்து எல்லா சீசனிலும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார் .பலரும் தற்போது ஷிவாங்கி என்னும் பெயரை கேட்டதுமே இவருக்காக ஆரவாரம் செய்யும் நிலையில் தற்போது இவர் வெளியிட்ட வீடியோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கும் ஒரு குழந்தைத்தனமான இளம் பெண்ணாகத் தான் இவர் இருந்து வருகிறார்.

குரலை வைத்து கேலி

குரலை வைத்து கேலி

சினிமா நடிகைகள் என்றாலே அவர்கள் கலாய்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருவார்கள் .ஆனால் அந்த அளவிற்கு யாரும் இவரை கலாய்த்து தள்ளுவதில்லை. காரணம் இவர் என்ன செய்தாலும் அதில் ஒரு அப்பாவித்தனமான குழந்தைத்தனம் தான் தெரிகிறது என அனைவரும் கூறிவரும் நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஸ்கூல் படிக்கும் நிலையிலிருந்தே இவருடைய குரலை வைத்து பலரும் கலாய்த்து இருக்கிறார்கள்.

வேதனை

வேதனை

அது தனக்குள் எவ்வளவு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என இவர் கண்ணீரோடு வெளியிட்ட வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே தற்போது பிரபலமாக இருக்கும் பல பிரபலங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல அவமானங்களையும் தடைகளையும் தாண்டி தான் வந்திருக்கின்றனர் .

சாதனை வளர்ச்சி

சாதனை வளர்ச்சி

ஆனால் குடும்ப சூழலில் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் அவருடைய குரலை வைத்தும் உருவத்தை வைத்து பலர் கிண்டல் பண்ணி இருந்தாலும் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருந்து அந்தக் கிண்டல் களையும் புறந்தள்ளிவிட்டு ஏளனமாக பேசியவர்கள் முன்பு தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பதை பார்த்துதான் அவருடைய ரசிகர்கள் கூட பெருமையாக கூறி வருகின்றனர்.

அம்மாவின் சாதனை

அம்மாவின் சாதனை

அதுவுமில்லாமல் இந்த மாதிரி பலர் நம்மை கேலி செய்தாலும் அவர்கள் முன்பு அவர்களை வெட்கப்பட வைக்கும் அளவில் நம்மளுடைய வளர்ச்சி இருக்கவேண்டுமென அவருடைய ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஷிவாங்கி பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும் அவரது அம்மா சந்திரமுகி படத்தில் ரொம்பவே பிரபலமான ரா ரா சரசுக்கு ரா ரா பாடலை பாடியவர் என்பதும் இவரை பிக் பாஸ் நாலு சீசனுக்காக அணுகி இருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறி நிராகரித்து விட்டார்

விஜய் அஜீத்துடன் நடிக்கணும்

விஜய் அஜீத்துடன் நடிக்கணும்

அதுவுமில்லாமல் எனக்கு நடிப்பதில் அந்த அளவிற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து வந்த இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு அஜித் மற்றும் விஜய் உடன் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதுவும் இல்லாமல் சிவானி எப்போதுமே பேசுவதற்கு தன்னுடைய கிச்சுகிச்சு குரலினால் செல்லமாகவும் அனைவரையும் வசீகரிக்கும் அளவில் குழந்தைத்தனமாக பேசிக்கொண்டு இருந்தாலும் பாட்டு பாடும் போது மட்டும் ரொம்பவே முதிர்ச்சியடைந்த பெரிய மனுஷியாக தன் குரலால் அனைவரையும் கட்டி இழுத்து விடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X