ஷூட்டிங் ஸ்பாட்தான் என் வீடு…. தென்றல் ஸ்ருதி
தென்றல் தொடரில் கணவருடன் ரொமான்ஸ்... ஆபிஸ் தொடரில் கோபக்காதல் என ரொமான்ஸ் நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி...
சின்னத்திரையில் வரவேற்பு அதிகம் இருந்தாலும் சீரியல்களை தேர்வு செய்து நடிக்கிறார்.
சினிமா ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த போதே சீரியல் பக்கம் நுழைந்து விட்டவர். சீரியல் யூனிட்டை குடும்பம் என்கிறார்.

காதல் ஸ்ருதி…
தென்றல் தொடரில் அழுகை இல்லாத தமிழ் - துளசியின் ரொமான்ஸ் காட்சிகள் இப்போது ஒளிபரப்பாகிவருகிறது. இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதற்கு யூனிட்டை குடும்பம் போல நினைப்பதுதான் என்கிறார் ஸ்ருதி.

படிப்புக்கு டாட்டா
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சினிமா வாய்ப்புகள் வரவே படிப்புக்கு டாடா காட்டிவிட்டு நடிக்க வந்துவிட்டாராம் இந்த குருவாயூர் பொண்ணு.

காதல் டாட் காம்
மலையாளத்தில் அறிமுகமாகி கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனாலும் தென்றல் சீரியல்தான் தமிழ்நாடு முழுவதும் பிரபலத்தை தந்தது என்கிறார்.

அவுட்டோர் அலர்ஜி
சினிமாவில் அவுட்டோர் சூட்டிங், ஃபாரின் சூட்டிங் எல்லாம் அலர்ஜியாம் ஸ்ருதிக்கு. அப்பா, அம்மாவிற்கு செல்லப் பெண் என்பதால் வெளியே அனுப்ப பயம் என்கிறார்.

அட்ஜஸ்ட்
வாழ்க்கையில ஜெயிக்க நிறைய விசயங்களை அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். அது அர்த்தம் மாறாத அட்ஜஸ்ட் என்கிறார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











