மூன்றாம் உலகத்தில் இருந்தும் வெளியேறிய சிருஷ்டி டாங்கே.. காயத்ரி, இந்திரஜாவுக்கு மறு வாய்ப்பு

சென்னை: நெருப்பு அணைந்தால் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காயத்ரி ரெட்டிக்கு மீண்டும் ஒரு மறு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்பட்டு மூன்றாம் உலகத்தில் தங்க வைக்கப்பட்ட இந்திரஜா சங்கர் மற்றும் சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட இருவரும் காயத்ரி வெளியேறியதை அறிந்து சந்தோஷப்பட்டனர்.

தன்னை வெளியேற்றிய காயத்ரி ரெட்டியும் வெளியேறி விட்டார் என்பதை அறிந்த இந்திரஜா சங்கர் ரொம்பவே ஹேப்பி ஆனார்.

இருக்கு ஆனா இல்லை

இருக்கு ஆனா இல்லை

சர்வைவர் எலிமினேஷன்களை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போயுள்ளனர். "இருக்கு ஆனா இல்லை" என்கிற எஸ்.ஜே. சூர்யா வசனம் போல, சர்வைவர் தமிழ் எலிமினேஷன்கள் நடக்கிறது. பின்னர் மாற்றி அமைக்கப்படுகின்றன. இவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தால், இல்லை வெளியேறியது இவர் அல்ல அவர் என போட்டு குழப்பி வருகிறார் அர்ஜுன்.

மூன்றாம் உலகத்தில் வெளியேறியவர்கள்

மூன்றாம் உலகத்தில் வெளியேறியவர்கள்

காடர்கள் மற்றும் வேடர்கள் அணியில் இருந்து தலைவிகள் தேர்வு செய்த இந்திரஜா மற்றும் சிருஷ்டி டாங்கே வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 3ம் உலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், புதிதாக வெளியேற்றப்பட்ட காயத்ரி ரெட்டியும் மூன்றாம் உலகத்தில் உள்ள போட்டியாளர்களையும் நடிகர் அர்ஜுன் நேற்றைய எபிசோடில் சந்தித்து அவர்களுக்கு ஒரு போட்டியை வைத்து அதில் இருந்து ஒருவரை வெளியேற்றினார்.

இந்திரஜா சேஃப்

இந்திரஜா சேஃப்

இந்திரஜா வீக்கான போட்டியாளர் எனக் கூறிய காயத்ரி ரெட்டிக்கும் இந்திரஜாவுக்கும் இடையே போட்டியை வைக்காமல் இந்திரஜாவை அழகாக முன்பே சேஃப் செய்து விட்டார் அர்ஜுன். சிருஷ்டி டாங்கே மற்றும் காயத்ரி ரெட்டி போட்டிப் போடும் போதே, சிருஷ்டி தான் வெளியேறுவார் என ரசிகர்கள் கணித்து விட்டனர்.

பில்டிங் பிளாக்ஸ்

பில்டிங் பிளாக்ஸ்

கட்டைகளை ஒரு சீராக அடுக்கி அதன் மீது வளையங்களை வைக்க வேண்டும் என குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் கட்டுவதை போல ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில், சிருஷ்டி டாங்கே முதல் ரவுண்டை அழகாக செய்து முடித்த நிலையில், இரண்டாவது ரவுண்டை அவரால் செய்ய முடியவில்லை என்றும், அர்ஜுன் சொன்னதை காயத்ரி ரெட்டி தான் தெளிவாக புரிந்து கொண்டு செய்தார் என்றும் கடைசியாக காயத்ரி ரெட்டியை ஜெயிக்க வைத்து சிருஷ்டியை வெளியேற்றி விட்டனர்.

Recommended Video

SHRUSTI DANGE CONTROVERSIAL INTERVIEW | RAJAVUKKU CHECK MOVIE | FILMIBEAT TAMIL
ஒரு வாரத்துக்கு ஒருவர் தான்

ஒரு வாரத்துக்கு ஒருவர் தான்

பரவாயில்லையே பா.. ஒரே வாரத்தில் மூன்று போட்டியாளர்களை அதிரடியாக வெளியேற்றி விட்டார்களே என ரசிகர்கள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை வியந்து பார்க்க, மீண்டும் காயத்ரி ரெட்டி மற்றும் இந்திரஜா சங்கரை சேவ் செய்து ஒரு வாரத்துக்கு ஒருவர் தான் எலிமினேஷன் என மூன்றாம் உலகத்தில் இருந்து சிருஷ்டி டாங்கேவுக்கு டாட்டா காட்டி விட்டனர்.

இனிமே தான் இருக்கு

இனிமே தான் இருக்கு

காயத்ரி ரெட்டி தன்னை வீக்கான போட்டியாளர் என வெளியேற்றியதால் செம கடுப்பில் இருக்கும் இந்திரஜா சங்கர் தான் உன்னை விட ஸ்ட்ராங் ஆன போட்டியாளர் என காயத்ரி ரெட்டிக்கு மூன்றாம் உலகில் பாடம் நடத்தி மீண்டும் காடர்கள் அணிக்கு செல்வாரா? இல்லை அவரையும் அடுத்ததாக இன்னொரு போட்டி வைத்து வெளியேற்றி விடுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X