Shruthi Narayanan: பிரைவேட் வீடியோ விவகாரம்.. மக்கள் இவ்வளவு மோசமானவர்களா? நடிகை வைத்த கோரிக்கை!

சென்னை: கடந்த வாரத்தில் சின்னத்திரை வட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பிய விவகாரம் என்றால் அது, நடிகை ஸ்ருதி நாராயணனின் பிரைவேட் வீடியோ விவகாரம் குறித்து தான். அந்த வீடியோவை ஏ.ஐ, வீடியோ என நடிகை ஸ்ருதி நாராயணன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஓவியாவின் பிரைவேட் வீடியோ எனக் கூறி வீடியோ ஒன்றை இணையவாசிகள் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். மேலும் அந்த காலகட்டத்தில் ஓவியா லீக்ட் என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தார்கள். அதேபோல் பாலிவுட் நடிகை ஒருவர் தனது பாத்ரூமில் தானே கேமரா வைத்து வீடியோ எடுத்து பகிர்ந்தது சமீபத்தில் அம்பலமானது. ஆனால் சின்னத்திரை நடிகை விவகாரத்தில் நடந்திருப்பது அப்படியானது கிடையாது.

அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி நாராயணன். அவர் இப்போதுதான் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படியான நிலையில் இணையத்தில் பரவிய பிரைவேட் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Shruthi Narayanan Social Media Angry Post About Private Video Issues Goes Trending

பிரைவேட் வீடியோ: ஒரு பெண்ணை நடிகையாக நடிக்க வைக்க ஆன்லைனில் ஆடிசன் நடைபெறுவது போல வீடியோவில் உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், அந்த வீடியோ நடிகையின் பிரைவேட் வீடியோவாக மாறுகிறது. இப்படியான வீடியோவை இணையத்தில் யாரோ பகிர, அது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. முதலில் இந்த வீடியோவை ஏ.ஐ. வீடியோ எனக் கூறிய, ஸ்ருதி நாராயணனின் தற்போதைய சமூக வலைதள பதிவு ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை: அதாவது இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடம் கொடுங்கள் என கேப்ஷன் இட்டு அவர் பகிர்ந்துள்ள பதிவில், " இப்போது நடந்து கொண்டிருப்பது எல்லாம் லிமிட்டை கடந்து போய்க்கொண்டு உள்ளது. இந்த வீடியோ குறித்து கருத்துச் சொல்லும் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண் செய்தது சரியா தவறா என்ற கோணத்தில் தான் பேசுகிறார்கள். ஆனால் யாருமே அந்த வீடியோவுக்கு பின்னால் இருக்கும், ஆண் குறித்து பேசவில்லை. பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் அவனை கேள்வி கேட்கவில்லை.

Shruthi Narayanan Social Media Angry Post About Private Video Issues Goes Trending

காமவெறி: அந்த வீடியோவைப் பார்த்ததும் பெரும்பான்மையானவர்கள் அடடா புது வீடியோ, புது கன்டென்ட் கிடைத்து விட்டது எனக் கூறி, பகிர்ந்தார்களே தவிர, யாருமே இந்த வீடியோவால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, மனநிலை முதற்கொண்டு அனைத்தும் பாதிப்பை சந்திக்கும் என இரண்டு நொடிகள் கூட நினைக்கவில்லை. காமவெறி கொண்டு காட்டுத் தீ போல அந்த வீடியோவைப் பகிர்ந்தார்கள்.

Shruthi Narayanan Social Media Angry Post About Private Video Issues Goes Trending

பாதிப்பு: ஒரு பெண்ணாக நான் இந்த விஷயத்தில் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த வீடியோ விவகாரம் ஒரு பெண்ணை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெரும் பாதிப்பை உண்டாகியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ருதி நாராயணனின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்யுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: vijay television shruthi vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X