அப்பா மாதிரியே சென்றாயனை திணற வைத்த ஸ்ருதி ஹாஸன்
சென்னை: தான் அப்பா பொண்ணு என்பதை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நிரூபித்துவிட்டார் ஸ்ருதி ஹாஸன்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் கமல் அரசியல் மட்டும் பேசவில்லை, சினிமாவும் பேசுகிறார். மேலும் விஸ்வரூபம் 2 பாடல்களை இன்று ஸ்ருதி ஹாஸன் பிக் பாஸ் வீட்டில் வெளியிடுகிறார்.
அது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஸ்ருதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதி பாடுவதை பார்த்து ஆங்கிலத்தில் பாராட்டுகிறார் சென்றாயன். இதை பார்த்த கமல் அவருக்கு ஆங்கிலம் என்றால் பிடிக்கும், கற்றுக் கொண்டிருக்கிறார் என்று மகளிடம் தெரிவித்தார்.

சென்றாயன்
முதன்முதலாக சென்றாயன் ஆங்கிலத்தில் பேசியபோது பதிலுக்கு கமல் சூப்பராக ஆங்கிலத்தில் பேசி அவரை திணற வைத்தார். அப்பா வழியில் ஸ்ருதியும் சென்றாயனுடன் ஆங்கிலத்தில் பேசினார். ஸ்ருதி அப்பா செல்லமாச்சே.

கமல்
நம்ம அடுத்த வாரம் கூட பேசிக்கலாம் சார், ஸ்ருதி ஹாஸனிடம் ஒரு வார்த்தை பேசிக்கிறோம் என்று அப்பாவான கமலிடமே தெரிவிக்கிறார் டேனி. குசும்புக்கார பய பாஸ் நீங்க.
இசைக்கச்சேரி
பிக் பாஸ் 2 மேடையை கச்சேரி மேடையாக மாற்றி விஸ்வரூபம் 2 பாடல்களை வெளியிடுகிறார் கமல். இது இதை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











