என் முகத்தில் குத்தி, மூக்கை உடைத்தவர் அவர்: நடிகை மீது நடிகர் புகார்

By Siva

மும்பை: மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் காதலியுடன் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று நடிகர் சித்தார்த் சாகர் தெரிவித்துள்ளார்.

டிவி நடிகரான சித்தார்த் சாகரும், நடிகை சுபுஹி ஜோஷியும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் வைத்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணத்தை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு பக்கம் பிரிந்து சென்று விட்டனர்.

சித்தார்த் சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்பட்டு தன்னை அடித்ததால் பிரிந்ததாக சுபுஹி தெரிவித்துள்ளார். ஆனால் சுபுஹியின் குற்றச்சாட்டை சித்தார்த் மறுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிரச்சனை

பிரச்சனை

எனக்கு நிதி பிரச்சனைகள் ஏற்பட்டபோது எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படத் துவங்கியது. நாச் பாலியே 9, பிக் பாஸ் 13 ஆகிய நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்தன. உன்னுடன் சேர்ந்து நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன். எந்த நேரத்தில் நீ நம்மை பற்றி என்ன சொல்வாய் என்று தெரியாது. நீ டிராமா போடுவாய், நான் அப்படி செய்ய மாட்டேன் என்று நான் சுபுஹியிடம் தெரிவித்தேன்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

டிவி நிகழ்ச்சிகளில் நான் அவருடன் சேர்ந்து கலந்து கொள்ள மறுத்தது சுபுஹிக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் கோபம் அடைந்தார். ஸ்ப்லிட்ஸ்வில்லா குயீன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுபுஹி இரண்டாம் இடத்தை பிடித்தார். அது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஆனால் நிஜத்திலும் அவர் தன் விளையாட்டை காட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

சுபுஹி

சுபுஹி

என் முதல் காதலி சுபுஹி. ஆனால் அவருக்கு நான் 5 அல்லது 6வது ஆள். நாங்கள் நல்லபடியாகத் தான் பிரிந்தோம். பிரிந்து சில மாதங்கள் கழித்து அது குறித்து பேசி விளம்பரம் தேடப் பார்க்கிறார் சுபுஹி. நான் அவரை அடித்ததாக கூறுகிறாரே அவர் தான் முதலில் என் கழுத்தை பிடித்து மூக்கில் ஓங்கிக் குத்தினார்.

போலீஸ்

போலீஸ்

சுபுஹி குத்தியதை அடுத்து என் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியபோது அவரை தான் தள்ளிவிட்டேன். அந்த நேரம் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். என் டி-சர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் ரத்தம். நான் தப்பித்தால் போதும் என்று வீட்டை விட்டு ஓடினேன். என் செல்போனை எடுக்க திரும்பி வந்தபோது என்னை கைது செய்ய போலீசார் வந்திருந்தனர். நானும் அவரை கைது செய்ய வைத்திருக்கலாம் ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர் தான் முதலில் என்னை சமூக வலைதளத்தில் பிளாக் செய்தார், அதன் பிறகே நான் அவரை பிளாக் செய்தேன். அந்த அடிதடி சம்பவத்திற்கு பிறகு பிரிந்துவிடுவது என்று முடிவு செய்தோம் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X