twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பி.எம்.டபுள்யூ. காரில் படுவேகமாக சென்று 3 கார்கள் மீது மோதிய டிவி நடிகர்

    By Siva
    |

    மும்பை: மும்பையில் தனது பி.எம்.டபுள்யூ. காரை மூன்று கார்கள் மீது மோதியுள்ளார் நடிகர் சித்தார்த் சுக்லா.

    இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் சித்தார்த் சுக்லா(37). மும்பை ஓஷிவாரா பகுதியில் அவர் தனது பி.எம்.டபுள்யூ. காரில் அதிகவேகமாக சென்றுள்ளார்.

    அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

    சாலை

    சாலை

    சாலையில் தாறுமாறாக ஓடிய சித்தார்த்தின் கார் மூன்று கார்கள் மீது மோதி பின் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் சித்தார்த்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மோதிய கார்களில் இருந்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சித்தார்த்

    சித்தார்த்

    கார் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி சித்தார்த்தை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ரூ. 5 ஆயிரம் அபராதம் கட்டிவிட்டு ஜாமீன் பெற்று சித்தார்த் வெளியே வந்துவிட்டார். அவர் குடிபோதையில் கார் ஓட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    கார்

    நடிகர் சித்தார்த் கார் விபத்தை ஏற்படுத்தியது இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டிலும் கார் விபத்தில் சிக்கியுள்ளார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 5,000 அபராதம் கட்டி சித்தார்த் வெளியே வந்துள்ளது பொதுமக்களை கோபம் அடைய செய்துள்ளது. சித்தார்த் சல்மான் கானிடம் கார் ஓட்ட கற்றுக் கொண்டிருப்பார் என்று மக்கள் கிண்டல் செய்கிறார்கள்.

    படம்

    படம்

    சித்தார்த் கடந்த 2008ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். பாலிகா வது தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். சித்தார்த் கரண் ஜோஹாரின் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவர் மோசமாக நடந்து கொண்டதால் தில் சே தில் தக் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Television actor Siddharth Shukla was arested for ramming his BMW car into three cars before hitting the divider in Oshiwara, Mumbai. He was later released on bail.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X