ஃபர்ஸ்ட் நைட்டே நடத்திடுவாங்க போல.. கிலியை கிளப்பும் இந்தி பிக்பாஸ்.. புரமோவ பாருங்க புரியும்!

Recommended Video

Bigg Boss 13 | Sidharth and Rashami romancing | கிலியை கிளப்பும் இந்தி பிக்பாஸ்

மும்பை: இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காம களியாட்டங்கள் எல்லை மீறி செல்கின்றன.

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு சிம்ம சொப்பனம் தான். சின்னத்திரையின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாகவும் பேசப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.

சித்து வேலைகள்

சித்து வேலைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மற்ற சேனல்கள் தங்களின் டிஆர்பியை தக்கவைத்துக் கொள்ள குட்டிக்கரணம் போடாத குறையாக ஏதேதோ சித்து வேலைகளை செய்து பார்த்தன.

எதுவும் முடியலை

எதுவும் முடியலை

பிரபல தொலைக்காட்சி சேனல்கள் புதிய படங்களை அள்ளிவிட்டன. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

எதிர்பார்ப்புக்கு தீனி

எதிர்பார்ப்புக்கு தீனி

தமிழில் மட்டுமல்ல பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அத்தனை மொழிகளிலும் அவர்தான் டாப். காரணம் பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சாமானிய மக்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடுவதுதான்.

பிக்பாஸ் சீசன் 13

பிக்பாஸ் சீசன் 13

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் இந்தியில்தான் தொடங்கியது. தற்போது 13வது சீசனை எட்டியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 13 ஒளிபரப்பாகி வருகிறது.

எல்லாமே தூக்கல்

எல்லாமே தூக்கல்

இந்நிகழ்ச்சியில் கவர்ச்சி, காமம், காதல், துள்ளல் எல்லாமே தூக்கல்தான். குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு சென்சார் காட்சிகள் ததும்பும் நிகழ்ச்சியாக உள்ளது இந்தி பிக்பாஸ்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே சர்ச்சைகளும் பற்றிக்கொண்டது. மத கலவரத்தை தூண்டுகிறது, கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது என சமூக வலைதளங்களில் போராட்டங்கள் வெடித்தன.

சல்மான் கான் வீடு முன்

சல்மான் கான் வீடு முன்

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் கலர்ஸ் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமா நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

வேற லெவல் கெமிஸ்ட்ரி

வேற லெவல் கெமிஸ்ட்ரி

ஆனாலும் இதற்கெல்லாம் அசருவதாய் இல்லை நிகழ்ச்சிக் குழு. முத்தம், பெட் ஷேரிங், குளியல் என எல்லாமே எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சித்தார்த் சுக்லா மற்றும் ரஷாமி தேசாய் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது.

மக்களின் இதயம்

மக்களின் இதயம்

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் முதலே தலைப்புச் செய்தியாகி வருகின்றனர். சித்தார்த் மற்றும் ரஷாமி ஆகியோர் 'தில் சே தில் தக்' படத்தில் பார்த் மற்றும் ஷோவோரி ஆகிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்து மக்களின் இதயங்களை வென்றனர்.

புதுமண தம்பதி

புதுமண தம்பதி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் புரமோவில் அவர்கள் இருவரும் புதுமண தம்பதியை போல் உள்ளனர். நீச்சல் குளத்தில் ஆட்டம், முத்தம், ரொமான்ஸ், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தயாராக மலரால் அலங்கரிக்கப்பட்ட பெட் என வேற மாதிரி உள்ளது பிக்பாஸ் புரமோ.

ஃபர்ஸ்ட் நைட்

ஃபர்ஸ்ட் நைட்

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் சிலர் காரித்துப்பாத குறையாக திட்டித் தீர்த்துள்ளனர். மேலும் போறப் போக்க பார்த்தா ஃபர்ஸ்ட் நைட்ட நடத்தாம விடமாட்டாங்க போல என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X