புதுயுகம் டிவியின் 'ஜன்னல்' பக்கம் வந்த சிம்பு!
நடிகர் சிலம்பரசன் புதுயுகம் தொலைக்காட்சியின் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியில் தன்னுடைய எண்ணங்களை ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி, சினிமா பிரபலங்கள் இளைப்பாறும் பொழுதுபோக்குத் தளமாக மாறி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் தொகுப்பாளர் சங்கீதாவுடன் சினிமா நட்சத்திரங்கள் உரையாடும் இந்த நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
பிரபலங்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தையும் இறுக்கத்தையும் களைந்து இயல்பாக உரையாடிச்செல்லும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்கள் திரையுலக அனுபவங்களையும் பயணங்களையும் எதார்த்தமாகவும் ஒளிவு மறைவின்றியும் உரையாடுவது கூடுதல் சிறப்பாக அமைகிறது.

சிம்பு உடன் கலந்துரையாடல்
தொலைக்காட்சிகளில் தலைக்காட்ட விரும்பாத பல பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர். அந்த வரிசையில் சிறப்பம்சமாக நடிகர் சிம்பு கலந்து கொண்டு நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியை அலங்கரித்துள்ளார்.

வெளிப்படையாக பேசிய சிம்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறாத நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிப்படையான பல தகவல்களை பேசியிருக்கிறார்.

ஹன்சிகாவின் காதல்
ஹன்சிகாவுடனான காதல் முடிவுக்கு வந்துள்ள சூழலில், இதில் பங்கெடுத்திருப்பது பல எதிர்ப்பார்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு (09-03-14) மாலை 7 .00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சிம்புடன் செல்போன் பேச்சு
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் அரங்கில் நடிகை சங்கீதாவிடம் உரையாடும்போது தங்கள் செல்ஃபோனை அணைக்காமல் வைத்திருக்கவேண்டும் என்றும் நிகழ்ச்சியின்போது அவருக்கு வரும் அழைப்புகளை அப்படியே எடுத்து பேசவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி வரும் அழைப்புகளை பேசும்போது நிகழ்ச்சி மேலும் சுவாராஷ்யம் அடைகிறது. இந்தவாரம் சிம்பு உடன் செல்போனில் பேசப்போவது யார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











