பிக் பாஸ் ஏமாற்றிய சென்றாயனை அழைத்து பரிசு கொடுத்த சிம்பு

By Siva

Recommended Video

பிக் பாஸால் கைவிடப்பட்ட சென்றாயனை வரவேற்று பரிசளித்த சிம்பு, மஹத்!- வீடியோ

சென்னை: பிக் பாஸால் ஏமாற்றப்பட்ட சென்றாயனை சந்தித்து பரிசு அளித்துள்ளார் சிம்பு.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். நியாயப்படி ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இது அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனுக்கும் தெரியும்.

அப்பாவி என்பதால் சென்றாயன் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள்.

ஆதரவு

ஆதரவு

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்து வரும் கோலிவுட் பிரபலங்கள் சென்றாயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் கள்ள ஓட்டு போட்டு ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைத்திருக்கலாம் ஆனால் சென்றாயன் மக்களின் மனதை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இயக்குனர் நவீனோ பிக் பாஸ் வீடு ஒரு மூடர்கூடம் என்று சாடியுள்ளார்.

சென்றாயன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வேகத்தில் சென்றாயன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். சிம்பு அவருக்கு திருமூலரின் திருமந்திரம் புத்தகத்தை பரிசளித்துள்ளார். அப்போது மகத்தும் உடனிருந்திருக்கிறார். என் நண்பன் சிம்பு சென்றாயனை வரவேற்றார் என்று கூறி அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மகத்.

மகிழ்ச்சி

பிக் பாஸால் கைவிடப்பட்ட சென்றாயனை சிம்பு சந்தித்து பரிசு கொடுத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக கூறி வருகிறார்கள்.

மக்கள்

மக்கள்

நான் எதிலுமே ஃப்ரஸ்ட் வந்தது இல்லை என்று சென்றாயன் கமலிடம் அப்பாவியாக தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க விரும்பிய அவரை பித்தலாட்டம் செய்து அனுப்பி வைத்துவிட்டார்கள். டைட்டில் கிடைக்காவிட்டால் பரவாயில்லை சென்டு, உங்களுக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X