Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Roja serial: வெறும் சாம்பார் சீன்தான்... எத்தனை மெனக்கெடல்.. வாவ்!
சென்னை: சன் டிவியின் இரவு நேர ஒளிபரப்பு சீரியலான ரோஜா ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ஏகத்துக்கும் பொருத்தமாக ரசிக்கும்படி இருக்கிறது.
அர்ஜுன் தம்பி அஷ்வினுக்கு அணுவை கல்யாணம் செய்வது என்று அர்ஜுனின் அம்மா, அப்பா,பாட்டி என்று எல்லாரும் முடிவு செய்துடறாங்க. ஆனால், அணு நல்ல பெண் இல்லை, அதே சமயம் அஷ்வின் தான் காதலிக்கும் பெண்ணான பூஜாவை கல்யாணம் செய்துக்கணும்னும், அதுக்கு அண்ணனும், அண்ணி ரோஜாவும்தான் உதவி செய்யணும்னும் கோரிக்கை வச்சு இருக்கான்.
அணுவை குற்றவாளி என்று கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும், அணுவுக்கும் அஷ்வினுக்கும் கல்யாணம் நடக்க இருப்பதைத் தடுக்க வேண்டும். அணுவால், குடும்ப கவுரவத்துக்கு, சந்தோஷத்துக்கு இடையூறு வந்தவிடக் கூடாது என்று பாடு படுகிறான், குடும்பத்தினருடன் வாதாடுகிறான் அர்ஜுன்.
Azhagu serial: கடவுளே... அழகுக்கு இப்படி ஒரு நிலையா?

குடும்பத்தில் இருந்து விலக்கி
அர்ஜுன் குடும்பத்தின் நலனுக்காக பேச, அர்ஜுன் அப்பா அஷ்வின் அணுவைக் கல்யாணம் செய்துகிட்டால்தான் உயிருடன் இருப்பான் என்று அணு போலியாக ஜோதிடரை வைத்து சொல்லச் சொன்னதை நம்பி, அணுவை அஷ்வினுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்று முடிவு எடுத்துவிட, பாட்டியோ, அனுதான் தனது இறந்து போன மகள் வயிற்றுப பேத்தி என்று அணுவை அஷ்வினுக்கு கல்யாணம் செய்து வைத்தே ஆக வேண்டுமென்று நினைக்க. இது நடந்துவிடக் கூடாது என்று அர்ஜுன் வாதிட்டதால், அவனையும், ரோஜாவையும் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கிறார் அப்பா பிரதாப். அதாவது குடும்பத்தில் யாரும் அர்ஜுன், ரோஜாவிடம் பேசக் கூடாது என்று.

ரோஜா தனி சமையல்
இனி ரோஜா கிச்சனில் இன்னொரு அடுப்பு பற்ற வைத்து தனி சமையல்செய்ய வேண்டும் என்று அர்ஜுன் உத்தரவிட, புருஷன் பேச்சை மீறாத ரோஜா, சமையலை ஆரம்பிக்கிறாள். அத்தை என்னை மன்னிச்சுருங்க... நான் தனியா சமைக்கலேன்னா மறுபடியும் கீழே இறங்கி வந்து சண்டை போடுவார்.அப்புறம் என்னவெல்லாம் இந்த குடும்பத்தில் நடக்குமோ... பயமா இருக்கு.விட்டுடுங்க அத்தைன்னு ரோஜா கேட்க, கல்பனாவும் விட்டுட்டறாங்க. சுமதிக்கா கறிவேப்பிலை எங்கேன்னு கல்பனா கேட்க.அதைத்தானே அம்மா ரசத்திலே போட்டீங்கன்னு வேலைக்காரி சுமதி சொல்றாங்க.

அர்ஜுனன் சார்னு தெரியாது
சுமதி ஆன்ட்டி...இங்கே இருக்கற கறிவேப்பிலையை எடுத்துக் குடுங்க. கறிவேப்பிலைக்கு இது அர்ஜுன் சார் வாங்கினதுன்னு தெரியாது.நல்லா மணக்கும்னு ரோஜா சிரிச்சுகிட்டே சொல்ல, கல்பனா வேண்டாம் சுமதிக்கான்னு சொல்ல, ரோஜா சுமதியைப் பார்த்து கண் காமிக்க, சுமதி ராஜாவிடம் இருந்த கறிவேப்பிலை இரண்டை பறிச்சு பொரியலில் போடறாங்க. கல்பனா என்னக்கான்னு சொல்ல, உடுங்கம்மான்னு சுமதி சொல்ல, ரசிக்கும்படியான இந்த சீன் ஓவர்.

எல்லாரும் டைனிங் டேபிளில்
பாட்டி உட்பட எல்லாரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாம்பார் வாசனையை பிடிக்க, கல்பனா பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு எடுத்துட்டு வான்னு சொல்றாங்க பாட்டி. இதோ வந்திட்டேன் அத்தை பொறியல் இறக்கறதுதான் பாக்கின்னு குரல் கொடுக்கறாங்க கல்பனா. வரும்போது சுமதி தட்டை வைக்க, கல்பனா சாதத்தை போட்டு, ரசத்தை விடறாங்க. என்ன மருமகளே... ரசத்தை ஊத்தறே... சாம்பார் வாசனை மூக்கைத் துளைக்குது.. கொஞ்சம் சாம்பார் போட்டு சாப்பிட்டுட்டு அப்புறம் ரசம் போட்டுக்கறேன்னு சொல்றாங்க பாட்டி. பெரியம்மா...நம்ம வீட்டுல
சாம்பார் வைக்கலேன்னு வேலைக்காரி சுமதி சொல்றாங்க.