சிம்ரன் மறுபடியும் ஸ்கூல் போறாங்க….
பள்ளிச்சீருடை அணிந்த சிம்ரன், புத்தகப்பையுடன் சிரித்துக்கொண்டிருந்த காட்சி சென்னை நகரின் முக்கிய சாலைகளில், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டியாக சமீபத்தில் ஒட்டப்பட்டிருந்தது.
இது சீரியலுக்கா, சினிமாவிற்கா என்று தெரியலையே என்று யோசித்த போது நடன நிகழ்ச்சிக்கான சுவரொட்டி என்று கூறி விளக்கம் அளித்தார் சிம்ரன்.

டான்ஸ் தமிழா டான்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிம்ரன் நடத்திய டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சிம்ரன் தயாரித்து தொகுத்து வழங்கினார்.
இந்த நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பிரபுதேவா திறமையாக நடனமாடியவர்களை தேர்வு செய்தார்.

டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்
தற்போது இதன் இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட தேர்வுகள் நடந்து வருகிறது. என்று இரண்டாம் பாகத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்து கொள்கிறார்கள்.

முதல் கட்டத்தேர்வு
இந்த நிகழ்ச்சிக்கு டான்ஸ் தமிழா லிட்டில் மாஸ்டர்ஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த போட்டியில் இதன் முதல்கட்ட தேர்வு கோவை மற்றும் திருச்சியில் நடந்தது. சென்னையில் ஞாயிறன்று (ஜூன் 29ஆம் தேதி ) நடைபெற்றது.

ஜீ தமிழ் சேனலில்
சிறுவர் சிறுமிகளிடம் உள்ள நடன திறமையை வெளிக்கு கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜூலை) முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் சிம்ரன் தயாரித்து தொகுத்து வழங்குகிறார். இறுதிச்சுற்றுப் போட்டியில் பிரபுதேவா பங்கேற்று பரிசளிக்கிறார்.


Click it and Unblock the Notifications











