சிம்ரன்… சோனியா அகர்வால்… சிநேகா… புதுயுகம் சேனலின் நட்சத்திரங்கள்
புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்திருக்கிறார்கள். அக்னி பார்வை மெகா சீரியலில் சிம்ரன் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார்.
திருமணம் தொடர்பான ரியாலிட்டி ஷோவில் நடிகை சிநேகா முதன் முறையாக களம் இறங்கியுள்ளார். இதேபோல சினிமாவில் நடித்து பிரபலமான சோனியா அகர்வால் மல்லி தொடரில் நடிக்கிறார்.
சினிமாவை விட்டு நீண்டு காலம் விலகியிருந்த நடிகை அர்ச்சனா உணர்வுகள் தொடர் மூலம் மீண்டும் சீரியலில் நடிக்கிறார். இந்த தொடர்களைத் தவிர ஒரு நிமிடம் ப்ளீஸ், கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா?, ரிஷி மூலம், நட்சத்திர ஜன்னலில் என பல புத்தம் புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

சிம்ரன்
தமிழ் சினிமாவிலும் சீரியல்களில் யாரும் செய்திராத புதுமையான புரட்சிகரமான வேடத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார் நடிகை சிம்ரன். இவருக்கு இதுதான் முதல் மெகா சீரியல். இவர் நடித்திருப்பது உண்மைக் கதையாம்.

கல்லூரி பேராசிரியர்
புகழ்வாய்ந்த ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார் 40 வயது விதவையான மாதவி. கல்லூரி விடுமுறை விட்டு திரும்பும்போது, தங்கள் அபிமான ஆசிரியை மாதவி கர்ப்பிணியாக வருவதைக் கண்டு மாணவர்கள் அதிர்கிறார்கள். இதுதான் சீரியலின் சஸ்பென்ஸ்.

சிநேகா
மேளம் கொட்டு தாலிகட்டு என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. திருமண செலவை நாங்க பாத்துக்கிறோம் என்கிறார் சிநேகா. புதுமணப்பெண்களை அழைத்து கேள்விகள் கேட்டு அதற்கேற்ப பரிசுகளை வழங்குகிறார். சினிமாவில், விளம்பரத்தில் பார்த்ததை விட அழகாக இருக்கிறார் சிநேகா. நிகழ்ச்சி தொகுப்பாளரான அவரே ஒரு மணப்பெண் போலத்தான் இருக்கிறார்.

சோனியா அகர்வால்
சிறுவர்களுக்கான தொடர் என்றாலே சாகசம், அமானுஷ்யம், த்ரில், மேஜிக் என்றுதான் நகரும். ஆனால் முதன்முதலாக சிறுவர்களின் நிஜமான வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மல்லி. இந்த சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சோனியா அகர்வால் நடிக்கிறார்.

அர்ச்சனா
சினிமாவை விட்டு நீண்டகாலம் விலகியிருந்த வீடு அர்ச்சனா சுரேஷ்கிருஷ்ணா இயக்கும் உணர்வுகள் தொடர் மூலம் சீரியலுக்கு வருகிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் இளமையாக இருக்கிறார் அர்ச்சனா.

கேள்வி பாதி கிண்டல் பாதி
பிரபலங்களை சந்தித்து கிண்டலும் கேலியுமாய் கேட்கின்றனர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள். இதில் முதலில் சிக்கிய பிரபலம் வெங்கட் பிரபு


Click it and Unblock the Notifications











