ஜீ தமிழ் டிவியில் சிம்ரனின் "டான்ஸ் தமிழா டான்ஸ்"
இந்திய அளலில் வெற்றிபெற்ற ஜீ குழுமத்தின் டான்ஸ் நிகழ்ச்சியான 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' போல் மிகப் பெரிய நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டு வருகிறது 'டான்ஸ் தமிழா டான்ஸ்'
தென் இந்தியா முழுவதும் இதற்கான நேர்முகத்தேர்வு நடத்த்டபட்டு, பல ஆயிரம் போட்டியாளர்களில் இருந்து பல சுற்றுகளுக்கு பிறது சிறந்த 16 நடன போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனர்கள் பாப்பி, அண்டோ ஜார்ஜ், ஜானி மற்றும் மகி இந்த 16 போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

நடுவராக நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தன் பல தரப்பட்ட நடிப்பில் மட்டுமின்றி தன் நடன திறமையினாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை சிம்ரன் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக வருகிறார்.

பிரபல நட்சத்திரங்கள்
கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமாக திகழும் நடன இயக்குனர் சின்னி பிரகாஷ் இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு நடுவராவார். அது மட்டுமின்றி சினிமா உலகில் பிரபலமான பல நட்சத்திரங்களை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

தஞ்சாவூரில் அறிமுக விழா
இந்த நிகழ்ச்சியின் அறிமுகவிழா தஞ்சாவூரில் நடைபெற்றது. நடிகை சிம்ரன், ரோஜா, சோனியா, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

சிம்ரனின் கணவர்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய சிம்ரனின் கணவர் தீபக், சிம்ரனின் நடனம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார்.

கடத்தல் போஸ்டர்
சில வாரங்களுக்கு முன்பு சென்னை நகரமெங்கும் சிம்ரன் கடத்தப்பட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்தானாம்.

பலவகை நடனங்கள்
இதுவரை சினிமா பாடலுக்கு மட்டும்தான் ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடி ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட், ஹிப் ஹாப், ஜாஸ், சல்ஸா, சம்பா போன்ற பல தரப்பட்ட நடனங்கள் இடம்பெற உள்ளனவாம்.

ஜூலை 25 முதல்
இந்த பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஜூலை 25 முதல் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு டான்ஸ் தமிழா டான்ஸ் தொப்பி, பட்டம், பிரம்மாண்டமான பரிசுத் தொகையும் காத்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











