வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு.. விவாகரத்தால் எல்லாம் போச்சு.. புலம்பும் சிந்து பைரவி சீரியல் நடிகை!

சென்னை: ராஜ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற சிந்து பைரவி நெடுந்தொடரில் நடித்து பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரஷமி தேசாய். இவர் என்னத்தான் இந்தி நடிகையாக இருந்தாலும் இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தற்போது இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் நொந்து பேசி உள்ளார்.

ஷிவானி தேசாயான இவர் சினிமாவிற்காக தனது பெயரை ராஷ்மி தேசாய் என மாற்றிக்கொண்டார். மாடல் அழகியான இவர், உத்தரன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பலரின் பேவ்ரட் நடிகையாக மாறினார். தொலைக்காட்சியில் பிரபலமானதைத் தொடர்ந்து சினிமாவில் நுழைந்த இவர் போஜ்புரி படத்தில் லீட்ரோலில் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகையாக வெற்றி பெற்ற போதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களை சந்தித்து குறித்து மனம் கலங்கி பேசி உள்ளார்.

Sindhu bairavi interview

விவாகரத்து: அதில், உத்தரன் தொடரில் என்னுடன் இணைந்து நடிகர் நந்தீஷ் சந்துவை காதலிதேன். முதலில் நண்பர்களாக பழகினோம் பின் அது காதலாக மாறியதால், இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை சில ஆண்டுகள் கூட நிலைக்காமல் போனது. திருமண வாழ்க்கை என்னை மிகவும் உலுக்கியது. அது என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். கசந்த உறவுடன் வாழ்வது சரியாக இருக்காது என்பதால் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினேன்.

எல்லாமே போச்சு: திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து ஆடம்பர கார், வீடு வாங்கினோம். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு, அந்த கடன் என் தலையில் விழுந்துவிட்டதால், 3.25 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய கடனில் சிக்கினேன். இதை சமாளிக்க 2.5 கோடி ரூபாய் வீட்டை விட்டு வந்தேன். அந்த நேரம் இருப்பதற்கு கூட இடம் இல்லாமல் தவித்தேன். காரிலே பல நாட்கள் தங்கினேன், இதனால் மனஅழுத்ததிற்கு சென்று மதுக்கு அடிமையானேன் இதனால் என் வாழ்க்கை மேலும் சிக்கலாகி ஒரு கட்டத்தில் என்னிடம் இருந்த எல்லாமே போய்விட்டது.

பிக்பாஸ் 13: இந்த கால கட்டத்தில் தான், பிக் பாஸ் 13ல் கலந்துகொண்டேன், சல்மான் கானின் தயவால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பின் அந்த நிகழ்ச்சியின் மூலம், புது அனுபவம், புது நண்பர்கள் என வாழ்க்கை சற்றுமாறியது இதற்கு காரணம் சல்மான் கான் தான், அவரிடம் என்னைபற்றி பேசிய என் முன்னாள் காதலன் அர்ஹான் கானுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அவர்களால் தான் என் வாழ்க்கை மாறியது என பேசி உள்ளார்.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை: நடிகை ராஷ்மி தேசாய் 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக இருந்தார். பிக்பாஸ் 13 மற்றும் பிக்பாஸ் 15ல் அதிக நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராகவும் இருந்தார். இவர் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்து பைரவி சீரியலில் பைரவி என்ற ரோலில் நடித்து தமிழ் ஆடியன்சை கவர்ந்தார்.

More from Filmibeat

Read more about: sindhu bairavi interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X