சிங்கப்பெண்ணில் அன்புவை அவமானப்படுத்தும் மகேஷ்... ஆனந்தியை சீண்டிய பார்வதி!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடி திருப்பங்களுடன் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆனந்தியை ஒரு தலைகாதலுடன் சுற்றி வந்த மகேஷ் அன்புவை கம்பெனியில் அடித்து துரத்தும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து என்ன நிகழப்போகிறது எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வெள்ளித்திரையை காட்டிலும் தற்போது சின்னத்திரை நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு எகிறியிருக்கிறது. மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களை பெரிதளவில் கவர்வது சீரியல்கள் தான். அந்த வகையில் சன் டி.வியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கூடியுள்ளது. முக்கோண காதல் கதையாக ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தி தனது காதலன் யார் என்பதை யாருக்கும் வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்து வந்திருந்த ரகசியம் வெளிவந்துள்ளது. தற்போது அதுதொடர்பான புரோமோ தான் வைரலாகி வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் சறுக்கல்: தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.21 புள்ளிகளைப் பெற்று 2ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதற்கு காரணம் ஆனந்தி அன்பு காதலை விட மகேஷ் காதல் பெருசு என்கிற மாதிரி கதை நகர்கிறது. என் காதலி எனக்கு வேண்டும் என்று அடாவடித்தனமாக மகேஷ் கேரக்டர் எல்லை மீறி கொண்டு போகிறது. இதனால் அன்பு மற்றும் ஆனந்தி பாதிப்படைந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது.
இளைஞர்களை கவர்ந்த ஆனந்தி: சிங்கப்பெண்ணே சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனந்தி என்ற கிராமத்து பெண் நகரத்தில் சந்திக்கும் பிரச்னைகள், அவர் வேலை செய்யும் கம்பெனிக்குள்ளேயே சூழ்ச்சிகள் நிறைந்த மனிதர்கள் அடுத்தடுத்த பிரச்னைகளை ஆனந்தி எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பதை பார்க்க நிறைவாக இருக்கிறது. இப்படி நாளொரு வண்ணம் பிரச்னைகளுடன் திருப்பங்களுடன் நகர்ந்து சென்றாலும், மனதை லேசாக்கும் காதல் என சிங்கப்பெண்ணே தொடர் இளைஞர்களுக்கு பிடித்த சீரியலாகவும் உள்ளது.
அன்புவை அடித்து விரட்டிய மகேஷ்: தான் முதலாளியா இருப்பதால் தான் ஆனந்தி தன்னை வெறுப்பதாக நினைத்து கொண்ட மகேஷ், ஆனந்தியிடம் நெருக்கம் காட்ட முயற்சிக்கிறார். மகேஷின் இந்த செயலை கண்டு கோபம் கொள்ளும் ஆனந்தி, நான் இன்னொருவருக்கு மனைவி ஆக போகிறேன். என்னை எப்படி தொடலாம் என மகேஷிடம் கேட்கிறார். அதற்கு மகேஷ் நீ யாருக்கு மனைவியாக போகிறாய் என்று கேட்க; ஆனந்தி கடும் கோபத்தோடு அன்புக்கு தான் நான் மனைவியாக போகிறேன் என்று கூறுகிறார்.
இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மகேஷ், கம்பெனிக்குள் இருந்து அன்புவை எல்லோர் முன்பு அவமானப்படுத்தி வெளியேற்றுகிறார். இதனால், ஆனந்தி என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். அன்புவுக்கு நேர்ந்த கொடுமைக்கு அவரது அம்மா லலிதா என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. ஒரு பக்கம் ஆனந்தியை மருமகளா ஏற்றுக்கொள்வது போல் நடிக்கும் பார்வதியின் திட்டப்படி நடப்பதும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. காதல் கண்களை மறைக்கும் என்பதை போல் மகேஷ் முரடனாக நடந்துகொள்ளும் விதத்தை வார்டன் மனோன்மணி கண்டுகொள்வாரா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











