பிரியங்கா EX husband கிட்ட அவங்கள பத்தி கேளுங்க.. மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய சுசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் அதன் ஆங்கர் மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டில் இந்த ஷோ துவங்கப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடுத்துள்ள முடிவிற்கு காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை, இந்த சீசனில் ஆங்கராக இணைந்துள்ளார். தர்ஷனுடன் இணைந்து இவர், நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டுவந்த நிலையில், நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்டுவரும் மற்றொரு ஆங்கர் தன்னை செயல்பட விடுவதில்லை என்று தெரிவித்துள்ளார் மணிமேகலை.

television manimegalai suchitra

ஆங்கர் மணிமேகலை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி அடுத்தடுத்த சீசன்களை கொடுத்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், முதல் சீசனில் இருந்தே மணிமேகலை, புகழ் உள்ளிட்டவர்கள் கோமாளிகளாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்த ஆங்கர் மணிமேகலை, இந்த ஐந்தாவது சீசனில் ஆங்கராக மாறியுள்ளார். தர்ஷனுடன் இணைந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் மணிமேகலை.

மணிமேகலை அதிரடி முடிவு: இதுகுறித்து நேற்றைய தினம் வீடியோ மூலம் பேசியுள்ளார் மணிமேகலை. முன்னதாக அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தார். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் குக்காக செயல்பட்டுவரும் பிரபல ஆங்கர், தான் குக் என்பதை மறந்துவிட்டு தன்னை ஆதிக்கம் செலுத்த முயல்வதாகவும், புகழ், பணம் இவற்றைவிட சுய மரியாதை தனக்கு மிகவும் முக்கியம் என்றும் அதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது கோமாளித்தனங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஆங்கராகவும் ஏராளமான ரசிகர்களை வசீகரித்து வந்தார். இந்நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சுசித்ரா ஆதரவு: மணிமேகலைக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் பிரியங்காவை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ராவும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக மட்டுமே தான் இந்த வீடியோவை வெளியிடவில்லை என்றும், மோசமான சூழ்நிலையில் இருந்து விலகும் தைரியமான முடிவை எடுத்ததுடன் அங்கு நடக்கும் விஷயங்களை தெளிவாக பேசியுள்ள மணிமேகலையின் இந்த நடவடிக்கை அவர்மீது ஏராளமான மரியாதையை கொடுத்துள்ளதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.

television manimegalai suchitra

மணிமேகலைக்கே சப்போர்ட்: தான் எப்போதும் மணிமேகலையின் பக்கம்தான் என்றும் சுசித்ரா கூறியுள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில் எத்தனை பாதிப்புகளை அடைந்திருப்பார் என்பதை தன்னால் உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா குறித்தும் பேசியுள்ள சுசித்ரா, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் கேட்டால் தெரியும் என்றும் கூறியுள்ளார். மிகவும் திறமையான அவரது வாழ்க்கை நாசமாகி விட்டதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். இந்த வீடியோவின் நோக்கம் தான் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக உள்ளதை தெரிவிப்பதுதான் என்றும் சுசித்ரா பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X