ஒரு அம்மா புருஷன் வேணாம் குழந்தை வேணுங்குது.. ஒரு அம்மா கம்ருதீனை மகனு சொல்லுது.. என்ன கன்றாவிடா!
சென்னை: பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்ப வாரமாக இருப்பதால் குடும்பத்தில் இருக்கும் நபர்கள், ஒவ்வொருவராக வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதில், அனைவரும் பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் பார்வதியும் கம்ருதீனும் நெருங்கி பழகி வருவதால், பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் பார்வதியின் அம்மா அதை கண்டிப்பார்கள் என்பதால் அவருடைய வருகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பார்வதியின் அம்மா, ஒரு சில அட்வைஸ்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் . அதேபோல பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த கம்ருதீனின் அக்கா, அவருக்கு சில அட்வைஸ்களையும் கொடுத்துவிட்டு சென்றார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சண்டை எதுவும் நடக்கவில்லையே என புலம்பி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9: இந்த நேரத்தில் தான் மைக் போடாமல் இருந்த அரோராவிற்கு தண்டனை கொடுத்த கம்ருதீன் அனைவர் இடத்திலும் சென்று மைக் போடாததற்கு மன்னிபு கேட்டுவிட்டு, அவர்களில் நல்ல குணங்களை பற்றி பேச வேண்டும் என்றார். இதனால் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டு, அவர்களை அரோக புகழ்ந்து பேசி வந்தார். அப்போது, சக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வந்து விட்டு போனதைப் பார்க்கும்போது எனக்கும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் புருஷன் வேண்டாம். புருஷன் இல்லாமல் குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும். குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்றால் கூட நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

மகனாக தத்து எடுத்துக்கொள்கிறேன்: அரோரா சொன்ன வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராமில் கம்ருதீனை மகனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். மேலும், நீங்க ரொம்ப நல்ல ஓவியம் வரைகிறீர்கள், நம்பர் ஒன் ஓவியர் ஆவதற்கான அனைத்து திறமையும் உங்களிடம் உள்ளது. நீங்கள் ஓவியம் வரைவதை பார்த்து நான் வியந்துவிட்டேன். உங்களை நான் மகனான தத்து எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பேசி உள்ளார். இதைப்பார்த்த அனைவரும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கன்றாவியை எங்களால் பார்க்க முடிவில்லை. இதுவேறையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











