யாஷிகா முத்தம் கொடுக்க கூப்பிடுது, ஐஸ்வர்யா வாயை துடைத்து விடுது: வாழ்றான்யா மகத்
Recommended Video

சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த சிங்கிள்ஸ் மற்றும் யாஷிகா ஆர்மியால் மகத்தை சபிக்காமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் ராகவேந்திரா வாழ்கிறார். எப்ப பார்த்தாலும் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து ஜாலியாக கடலை போடுகிறார். லவ்வர் பாய் ஷாரிக் கூட ஐஸ்வர்யாவுடன் அந்த அளவுக்கு கடலை போட்டது இல்லை.
கடலையை விடுங்க பேசியது கூட இல்லை. ஆனால் இந்த மகத் வாழ்கிறார்.

கடுப்பு
இரவு நேரத்தில் யாஷிகா, ஐஸ்வர்யா இடையே போய் படுத்தபோதே சிங்கிள்ஸ் எல்லாம் காண்டாகி மகத்தை திட்டத் துவங்கினார்கள். இந்நிலையில் நேற்றும் அவர்களின் படுக்கையில் போய் படுத்துக் கொண்டார்.

முத்தம்
யாஷிகா என்னவென்றால் வந்து முத்தம் வாங்கிட்டுப் போ என்று மகத்தை அழைக்கிறார். அவரும் எழுந்து வருகிறார். நேற்றைய டாஸ்கின்போது ஐஸ்வர்யாவை தனது வாயை டிஷூ பேப்பரால் துடைக்க வைத்தார் மகத்.

வேலை
யாஷிகாவை தனது துணியை துவைத்து காயப்போடுமாறு கூறினார். டாஸ்க் என்பதால் யாஷிகாவும் மகத் சொன்னதை எல்லாம் செய்தார். எனக்கும் நேரம் வரும் என்று ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.

மகத்
மகத் சேரில் அமர்ந்திருக்க யாஷிகா அவருக்கு காபி கொடுத்தார். அதாவது கப்பை யாஷிகா பிடித்திருக்க மகத் நோகாமல் காபி குடித்துக் கொண்டிருக்கிறார். ஏலே, இதெல்லாம் டூ மச்டே.

இடுப்பு
யாஷிகாவை தனது படுக்கையை சரி செய்ய சொன்னார் மகத். சேலை அணிந்திருந்த யாஷிகா குனிந்து படுக்கையை சரி செய்ய அவர் இடுப்பை தொடப் போனார் மகத். டேய் டேய் என்னடா செய்ற என்று பாலாஜி அதிர்ச்சியில் கேட்க இடுப்புண்ணே என்றார் மகத். மகத் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்து சிங்கிள்ஸும், யாஷிகா ஆர்மியும் அவர் மீது கொலவெறியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











