பேசுற வாய் நம்மள பத்தி கெட்டதா தான் பேசிட்டு இருக்கும்.. திடீரென ஸ்ருதி நாராயணன் போட்ட போஸ்ட்!
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான ஸ்ருதி நாராயணன் சினிமாவில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த வீடியோ காட்சிகள் என சில ஆபாச வீடியோக்கள் இணையத்தில் கசிந்த நிலையில், ஆரம்பத்தில் அதை ஏஐ வீடியோக்கள் என சொல்லி தப்பிக்க நினைத்த ஸ்ருதி நாராயணன் பின்னர், வசமாக சிக்கிக் கொண்டார் என அவரை சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்து வறுத்தெடுத்தனர்.
கட்ஸ் எனும் படத்தில் நடித்த ஸ்ருதி நாராயணனுக்கு அந்த படம் பெரிதாக ஓடாத நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்களை பதிவிட்டு தனக்கு எதிராக வலம் வரும் நெகட்டிவிட்டிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

சினிமாவில் சாதிக்க பல பெண்கள் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு வரும் நிலையில், சிலர் ஷார்ட் கட்டில் அனைத்தையும் அடைந்து விடுவதாக கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் முன்னேறவே முடியாது என ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆபாச வீடியோவால் பாதிப்பு: 'வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை. வீடியோவை பகிர்ந்தவர்கள், அதனால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பை சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. ஒரு பெண்ணை உடல், மனம், உணர்வு ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை இங்கே யாரும் புரிந்துக் கொள்ளமாட்டரகள்" என ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ஸ்ருதி நாராயணன் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பேசுற வாய் பேசிட்டுத்தான் இருக்கும்: தொடர்ந்து படங்களில் நடிக்கவும் விளம்பரங்களில் நடித்தும் வரும் ஸ்ருதி நாராயணன் லேட்டஸ்ட்டாக சில போட்டோக்களை வெளியிட்டு, "வாழ்க்கையில் நாம் கடக்கும் பல மைல்ஸ்டோன்கள் சிறிதாக தெரிந்தாலும் அது வலிமையான வெற்றி பாதைக்கு வழிவகுக்கும். நெகட்டிவிட்டிகளை இக்னோர் செய்துவிட்டு தொடர்ந்து போராட வேண்டும். பேசுற வாய் நம்மை பற்றி தவறாகத்தான் பேசிக் கொண்டிருக்கும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் முன்னேறிக் கொண்டே இருந்தால் தான் வெற்றி பெற முடியும்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











