ஸ்ருதி அப்பா பிளானை தெரிந்து கொண்ட அண்ணாமலை.. மொத்த குடும்பத்திற்கும் முத்து கொடுத்த அதிர்ச்சி

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 25ஆம் தேதி எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதி அப்பா மற்றும் அம்மா இருவரும் முத்துவை கோபப்படுத்தி இந்த ஃபங்ஷனில் முத்துவை சண்டை போட வைக்க வேண்டும். அதை வைத்து வீட்டில் பிரச்சனை செய்ய வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணி ஒரு பக்கம் முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்று ஆள் வைத்து செட் பண்ணி இருக்கிறார்.

ஆனால் தன்னை அவமானப்படுத்தும் வாசுதேவனின் சூழ்ச்சி பற்றி அண்ணாமலை புரிந்து வைத்திருக்கிறார். அதோடு முத்துவுக்காக அண்ணாமலை சில முக்கிய முடிவுகளையும் எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 25th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பார்லரில் விஜயா ரோகிணியிடம் உங்க அப்பா கிளம்பிட்டாரா? என்று விசாரித்தபடியே உங்க அம்மா இருந்திருந்தால் கண்டிப்பா உன்னை பாக்க வந்திருப்பாங்க. அவங்க தான் அல்பாய்ஸ்லயே போயிட்டாங்களே என்று சொல்ல அதை கேட்டு ரோகிணியின் அம்மா வருத்தப்படுகிறார்.

ஆனாலும் தன்னுடைய மகளுக்காக பொறுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதை தொடர்ந்து மண்டபத்தில் அண்ணாமலை குடும்பத்தினர் மொத்தமாக வந்திருக்கின்றனர். மண்டபத்தை பார்த்ததும் பார்வதி இவ்வளவு பெரிய மண்டபம் என்று வியந்து போக அதற்கு விஜயா ஆமா பெரிய இடத்துகாரங்கன்னா சும்மாவா? இப்படித்தான் பண்ணுவாங்க என்று சொல்லிக்கொண்டு ரோகிணியிடம் உங்க அப்பா கிளம்பிட்டாரா என்று கேட்க,

Siragadikka aasai march 25th promo and episode full update

அதற்கு ரோகிணி கிளம்பிட்டாரு இன்னும் கொஞ்ச நேரத்துல பிளைட் லேண்ட் ஆகிரும் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் மண்டபத்திற்கு வருகின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதி அப்பா வாசுதேவனிடம் வர்றவங்களை நீங்க வரவேற்கணும். அப்போதான் நம்ம நெனச்சா பிளான் நடக்கும் என்று சொல்ல அவரும் சரி என்று வந்தவர்கள் எல்லோரையும் விசாரிக்கிறார்.

மறுபக்கத்தில் மீனா முத்துவிடம் எப்படி நாம இங்க வந்ததும் காரை ஆஃப் பண்ணிட்டு போகும்போது ஸ்டார்ட் பண்றோமோ அதுபோல நீங்க வாயை வச்சுட்டு சும்மா இருக்குன்னும். நீங்க எதுக்கும் வாய் பேசவே கூடாது என்று சொல்ல, சரி என்று முத்துவும் வருகிறார். அப்போது மண்டபத்திற்குள் வரும்போது வாசுதேவன் மற்றும் அவருடைய மனைவியிடம் முத்து நக்கலாக வணக்கம் சொல்லிக்கொண்டு உள்ளே வருகிறார்.

Siragadikka aasai march 25th promo and episode full update

அப்போது ஸ்ருதி தன்னை ரெடி பண்ண மீனாவையும் ரூமுக்கு கூப்பிட அவருடைய அம்மா மீனாவை எதற்கு டிஸ்டர்ப் பண்ற என்று அங்கு விருந்தினர்கள் இருக்கும் இடத்தில் உட்கார வைக்கிறார். மீனாவும் முத்துவும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது முத்து மௌன விரதம் இருப்பது போல வாயில் கையை வைத்து யாரிடமும் பேசாமல் இருக்கிறார்.

அப்போது சகாதேவன் தன்னுடைய நண்பரை கூப்பிட்டு அண்ணாமலை பக்கத்தில் உட்கார்ந்து அவர் மேல் ஷூ படும் மாதிரி இருக்க சொல்ல, அவரும் அப்படியே செய்கிறார். மறுபக்கத்தில் விஜயா ரோகிணியிடம் சம்மந்தி இன்னும் வரலையா? என்று டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார் அதற்கு ரோகிணி வந்து வடுவார் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகிணி வித்யாவிடம் முத்துவை குடிக்க வைத்து அவனுடைய மூடை மாற்றினால் பெரிய பிரச்சனை பண்ணி விடுவான் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai march 25th promo and episode full update

அண்ணாமலை தன் பக்கத்தில் உட்கார்ந்தவர் கால் தன்மீது படுவதால் வாசுதேவனின் பிளானை புரிந்து கொண்டு அங்கிருந்து எழுந்து வருகிறார். பிறகு அண்ணாமலை நண்பர் பரமு வாசுதேவன் மாறிட்டாரா என்று கேட்க, அதற்கு அண்ணாமலை நாங்க வரும்போது நல்லாதான் வரவேற்பு செஞ்சார். ஆனா அவர் மாறல்ல அப்படியே தான் இருக்கிறார். என்று மண்டபத்தில் நடந்ததை சொல்ல அதற்கு பரமு கோவப்படுகிறார்.

ஆனால் அண்ணாமலை வேண்டாம், நீ கோவப்படாதே, முத்து இருக்கான். இங்க அவன் சண்டை போட்டு விடுவான். அதற்காகத்தான் இந்த சகாதேவன் இப்படி ஒரு வேலை பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரூமில் ரோகிணியும் முத்துவை எப்படி மாட்டிவிடலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே மனோஜ் வந்துவிட யாரைப் பற்றி பேசுறீங்க என்று மனோஜ் கேட்க அப்பா பத்தி தான் பேசிட்டு இருக்கோம் என்று இருவரும் சமாளித்து விடுகிறார்கள்.

Siragadikka aasai march 25th promo and episode full update

மறுபக்கத்தில் வாசுதேவனும் அவருடைய மனைவியும் முத்துவை வச்சு பிரச்சனை செய்ய திட்டம் போடுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இன்றைய எபிசோடில் பிரச்சனை நடந்தாலும் முத்து அமைதியாக இருந்து சமாளிச்சு இருக்கிறார். ஆனால் நாளை என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X