சிறகடிக்க ஆசை மீனாவா இது... சீரியலில் புடவை.. இன்ஸ்டாவில் வேறமாறி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோவைப் பார்த்து சிறகடிக்க ஆசை மீனாவா இது என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
திரைப்படத்தை விட தினம் தினம் ஏதோ ஒரு கதைக்களத்துடன் இல்லம் தேடி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.இந்த தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். விகடன் டெலிவிஷன் ராதிகா ஸ்ரீனிவாசன் மற்றும் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். கோமதி பிரியா, சல்மா அருண், வெற்றி வசந்த், ஸ்ரீ தேவா,ப்ரீதா ரெட்டி, அனிஷா ஸ்ரீகுமார், பாக்கியலட்சுமி, பொன் வண்ணன், வனிதா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நடிகை கோமதி பிரியா: சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்பர் ஒன் சீரியலாக சிறகடிக்க ஆசை தொடர் பட்டையை கிளப்பி வருகிறது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மீனாவுக்கும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த டாக்ஸி ஓட்டுநரான முத்துவுக்கும் எதிர்பாராதவிதமாக திருமணம் நடக்கிறது. தற்போது அவர்கள் மெதுவாக ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். இப்படி பல கதைகள் கொண்ட தொடராக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. அண்மையில் எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கி இருந்தார்.
சீரியலில் புடவையில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, மார்டன் உடையில் மிகவும் ஸ்டைலாக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த, இணையவாசிகள் சிறகடிக்க ஆசை சீரியலில் புடவையில் வலம் வரும் மீனாவா இது நம்பவே முடியலையே என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் கோமதி பிரியாவை 682K followers பின் தொடர்ந்து வருகின்றனர்.

நல்ல வாய்ப்பு: மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா, பல தொடர்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். அந்த சீரியல் மூலம் பிரபலமான மீனா அண்மையில் அளித்த பேட்டியில், சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள வெர்ஷனில், நான் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனுஷின் சிறுவயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. வெற்றிமாறன் சார் படம் என்றதும், மகிழ்ச்சி அடைந்தேன், ஆடிஷனில் கலந்து கொண்டு செலக்ட் ஆனேன். ஆனால் அந்த நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அசுரன் திரைப்படத்திற்கு என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது இதனால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். கோமதி பிரியா விலகிய பிறகு தான் அசுரன் படத்தில், அம்மு அபிராமி அந்த கேரக்டரில் நடித்து இருக்கிறார். இதைகேள்வி பட்ட கோமதியின் ரசிகர்கள், நல்ல வாய்ப்பை இப்படி நழுவவிட்டு விட்டீர்களே என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











