Serial Actress Preetha: வித்தியாசமான காதல் பிரபோசல்.. சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதியின் காதல் அனுபவம்!

சென்னை: சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களிடம் நடித்து வருகிறார் நடிகை பிரீத்தா. ஆனாலும் சிறகடிக்க ஆசை தொடரில் இவர் ஏற்று நடித்துவரும் ஸ்ருதி கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்துள்ளது. தான் நினைக்கும் விஷயங்களை போல்டாக பேசும் கேரக்டர் ஸ்ருதியினுடையது. நவீன கால பெண்களின் பிரதிநிதியாக இந்த கேரக்டரில் இவர் காணப்படுகிறார்.

இந்த சீரியலில் ஸ்ருதியாக நடித்துவரும் பிரீத்தா நிஜத்தில் தனக்கும் ஸ்ருதிக்கும் 60 சதவிகிதம் ஒற்றுமை காணப்படுவதாகவும் அதனால்தான் அந்த கேரக்டரில் தன்னால் இயல்பாக பொருந்த முடிவதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பெற்றோர் மீது அதிக அக்கறை கொள்ளாமல் மற்றவர்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் ஸ்ருதியின் மைனஸ் ஒரிஜினலாக தனக்கு கிடையாது என்றும் பிரீத்தா கூறியுள்ளார்.

Television Siragadikka Aasai serial Preetha

நடிகை பிரீத்தா: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்லப்பிள்ளையாக ஸ்ருதி என்ற கேரக்டரில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரீத்தா. முன்னதாக சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை சிறகடிக்க ஆசை சீரியல் பெற்றுத் தந்து வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய மனதிற்கு பட்ட அனைத்தையும் வெளிப்படையாக பேசும் குணமுடையவராக நடித்து வருகிறார் பிரீத்தா. சீரியலில் மாமியார் விஜயாவின் விருப்பத்திற்குரிய மருமகளாக இருந்தாலும் சமயத்தில் மீனாவிற்கு சப்போர்ட் செய்து விஜயாவே வெறுக்கும் அளவிற்கு நடந்துக் கொள்கிறார் ஸ்ருதி.

சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதி: இதனிடையே, இதுபோன்ற பெண்தான் உனக்கு மருமகளாக கிடைப்பார் என்று நிஜ வாழ்க்கையில் அம்மாக்கள் தன்னை வைத்து தங்களின் மகன்களுக்கு சாபம் விடுவதாக பிரீத்தா தெரிவித்துள்ளார். நிஜத்தில் தன்னை போன்ற மருமகளை மேய்ப்பது மிகவும் கடினம் என்றும் நகைச்சுவையாக பிரீத்தா கூறியுள்ளார். இந்த கேரக்டரில் தான் தன்னுடைய கணவனை சமமாக நடத்துவதாகவும் அனைத்து வேலைகளையும் செய்ய வைப்பதாகவும் இதுவே அவர்கள் அப்படி கூறுவதற்கு முக்கியமான காரணம் என்றும் ப்ரீத்தா கூறியுள்ளார். ஆனால் ஆண்கள் தன்னைப் போன்ற மனைவியைத்தான் விரும்புவதாக கமெண்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: இந்த கேரக்டரில் மனைவியாக ரவிக்கு மிகப்பெரிய சப்போர்ட் செய்தாலும், தான் நினைத்ததை செய்து முடிக்கும் குணம், அனைத்துதரப்பினரையும் கவராது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, சமூக வலைதளங்களில் மோசமான கமெண்ட்களை கொடுக்கும் நபர்களை தான் பிளாக் செய்து விட்டு சென்றுக் கொண்டே இருப்பேன் என்றும் பிரீத்தா தெரிவித்துள்ளார். அவர்களின் கமெண்ட்களுக்காக தன்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். துவக்கத்தில் மற்றவர்களின் கமெண்ட்கள் தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் ஆனால் தற்போது சிரித்துக் கொண்டே கடந்து சென்று விடுவதாகவும் கூறியுள்ளார்.

காதல் பிரபோசல்: தனக்கு வரும் காதல் பிரபோசல்களை தான் நேரடியாகவே எதிர்கொள்வதாகவும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிடுவதாகவும் பிரீத்தா தெரிவித்துள்ளார். உண்மையில் தனக்கு அதிகமான லவ் பிரபோசல்கள் வந்துள்ளதாகவும் அதில் ஒருவர் கொடுத்த கிப்ட் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு பாட்டிலில் பல்லி மிட்டாய் போல போட்டு அவர் கொடுத்ததாகவும் முதலில் சாதாரணமாக நினைத்த தான் பின்பு அதை கொட்டி பார்த்தபோது, ஒவ்வொன்றும் பேப்பரை கொண்டு செய்யப்பட்டிருந்ததாகவும் அதை பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் தன்னை வர்ணித்து எழுதியிருந்ததாகவும் பிரீத்தா தெரிவித்துள்ளார்.

மீனாதான் பார்ட்னர் இன் கிரைம்: சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய பார்ட்னர் இன் கிரைம் மீனாதான் என்றும் பிரீத்தா கூறியுள்ளார். மற்றவர்கள் குறித்து கமுக்கமாக உட்கார்ந்துக் கொண்டு கமெண்ட் செய்வது, அதையும் டைரக்டருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது என தங்களது அலப்பறைகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல செட்டில் அதிகமாக பாடல்கள் பாடி என்ஜாய் செய்யும் முத்துவை போலவே தானும் அதிகமாக பாடல்களை பாடி வைப் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். செட்டில் அதிகமாக சாப்பிடுபவர் ரோகிணிதான் என்றும் இதேபோல செட்டில் அதிகமாக மொபைல் போனை மனோஜ்தான் யூஸ் செய்வார் என்றும் பிரீத்தா தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜாலியாக பேசிக்கொண்டிருந்த பிரீத்தா ஒருகட்டத்தில் நடிகை என்று தெரிந்துக் கொண்டு திருமணம் செய்து அவர்களை நடிக்க விடாமல் செய்வதுகுறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X