மகனின் காதல்.. மன உளைச்சல்.. சிறகடிக்க ஆசை நடிகையின் விபரீத முடிவுக்கு காரணமா?.. நடிகர் பேட்டி!
சென்னை: பாக்கியலட்சுமி மற்றும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை என சொல்லப்பட்டு வந்த நிலையில், நடிகர் பழனியப்பன், ராஜேஸ்வரி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
'சிறகடிக்க ஆசை' சீரியலில், அருணின் அம்மாவாக நடித்து வந்த வந்த நடிகை ராஜேஸ்வரி, 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர். மகன் ஹேமந்த் தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளார், மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அந்த பணத்தை சதீஷ் எடுத்துக்கொண்டதாகவும். இதனால், ஏற்பட்ட சண்டையால், நடிகை ராஜேஸ்வரி டிசம்பர் 8ந்தேதி தேதி, கணவருடன் சண்டை போட்டுவிட்டு, சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் வந்துவிட்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை: அம்மா வீட்டிற்கு வந்ததில் இருந்து மூன்று நாட்களாக யாரிடமும் பேசாமல், மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி, டிசம்பர் 11 ந் தேதி இரவு அளவுக்கு அதிகமான பிபி மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த சின்னத்திரை நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்துவின் நண்பன் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து வரும், நடிகர் பழனியப்பன், நடிகை ராஜேஸ்வரி மரணம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
கஷ்டமாக இருந்தது: நடிகை ராஜேஸ்வரி மரண செய்தியை கேட்டு முதல் ஆளாக நான் தான் அந்த இடத்திற்கு சென்றேன். என்ன வாழ்க்கைடா இது என்று எனக்கு தோன்றியது. ஒரு நாளுக்கு முன்பு தான் நானும், ராஜேஸ்வரியும் சேர்ந்து நடித்தோம். சீரியலில் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கி இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே ராஜேஸ்வரி இறந்து விட்டதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த எபிசோடு ஒளிபரப்பாகும் போது, அது நடிப்பு என தெரிந்தாலும் அதைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
குழப்பத்தில் இருந்தார்: படப்பிடிப்பு தளத்தில் அதிகமாக ஃபோன் பேசிக்கொண்டு இருப்பார். அது கணவருடன் பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? என்று தெரியாது. ஆனால், ராஜேஸ்வரி சற்று குழப்பமாகத்தான் இருந்தார். மகன் காதலிப்பதாக என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், நான் எதையும் சரியாக கேட்டதில்லை. அவர் இறந்த பிறகு தான், அவருக்கும் இருக்கும் பிரச்சனை எனக்கு தெரிந்தது. தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால், அது என்னவென்று சரியாக தெரியவில்லை. சினிமாவிலோ, சீரியலிலோ அவருக்கு எந்த பிரச்சனை இருந்தது போல எனக்கு தெரியவில்லை. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தன. நன்றாக வர வேண்டிய நேரத்தில் தான் அவர் எப்படி ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என நடிகர் பழனியப்பன் வருத்தத்துடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











