சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ?.. தரமான பதிலடி கொடுத்த ஸ்ருதி நாராயணன்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. தற்போதைக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அந்த சீரியலுக்குத்தான் மிகப்பெரிய டிஆர்பி இருக்கிறது. பெரும்பாலான இல்லத்தரசிகள் இந்த சீரியலை தவறாமல் பார்ப்பதுண்டு. அதில் வித்யா என்கிற கேரக்டரில் நடிப்பவர் ஸ்ருதி நாராயணன். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவரது அந்தரங்க வீடியோ என ஒன்று லீக்கானது. இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக அவர் தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

சினிமாவிலோ, சின்னத்திரையிலோ சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்துவருகிறார்கள். அவர்களில் சரிபாதியினர் வாய்ப்பை பெறுகிறார்கள் சரிபாதியினர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். வாய்ப்பை பெற்ற அனைவருமே வென்றுவிடுகிறார்களா என்றால் அதுவும் அவ்வளவு எளிதில்லை. அந்த வெற்றியை பெறுவதற்கு பல தடங்கல்களை பெற வேண்டியதாகியிருக்கிறது. அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வாய்ப்பு வேண்டுமா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூச்சமே இல்லாமல் கேட்கும் ஆண்கள் பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஸ்ருதி நாராயணன்: சூழல் இப்படி இருக்க சின்னத்திரையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு தனது கலை பயணத்தை தொடங்கியவர் ஸ்ருதி நாராயணன். சென்னையில் கடந்த 2002ஆம் ஆண்டு பிறந்த ஸ்ருதி பள்ளி படிப்பை அங்கேயே முடித்துவிட்டவர். அதன் பிறகு கல்லூரி படிப்பை தொடரும்போது நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததன் காரணமாக சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை தீவிரமாக தேடினார் அவர். அந்தத் தேடலின் பலனாக அவருக்கு சீரியல் வாய்ப்புகளும் வர தொடங்கின.

Siragadikka Aasai Serial Actress Shruthi Narayanan Explains about Video Leak

நல்ல வளர்ச்சி: அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான கார்த்திகை தீபம் சீரியல் அவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மாரி சீரியலிலும் அவர் நடித்து அசத்தினார். நிலவரம் இப்படி இருக்க அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த சீரியல் என்றால் சிறகடிக்க ஆசை. அதில் அவர் ரோகிணிக்கு தோழியாக வித்யா என்கிற கேரக்டரில் நடித்துவருகிறார். இன்றுவரை அந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருப்பதன் காரணமாக ஸ்ருதியும் படு ஃபேமஸாகிவிட்டார்.

வெப் சீரிஸிலும் ஸ்ருதி: டிவி சீரியல்களில் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். அதாவது சமந்தா ரீ என்ட்ரி கொடுத்த ராஜ்&டிகே இயக்கிய சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் முக்கியமான ரோலினை ஏற்றிருந்தார் அவர். அவருக்கு அது பெரிய திருப்புமுனையை கொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் ஸ்ருதியை பெரிய திரையிலும் காணலாம் என்றே பலரும் கூறுகிறார்கள்.

அதிர்ச்சி கிளப்பிய வீடியோ: நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவின. அதனைப் பார்த்து பலரும் தங்களது அதிர்ச்சியை கிளப்பினர். மேலும் வாய்ப்புக்காகத்தான் அவர் இப்படி செய்தார் என்று பலரும் தங்கள் இஷ்டத்துக்கு கதை கட்ட ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி அது ஸ்ருதிதான் என்று கூறினார்கள். ஆனால் ஸ்ருதியோ அந்த வீடியோ குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ப்ரைவேட் அக்கவுண்ட்டாகவும் மாற்றினார்.

Siragadikka Aasai Serial Actress Shruthi Narayanan Explains about Video Leak

ஸ்ருதியின் தரமான பதிலடி: இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இந்த விவகாரம் குறித்து தற்போது தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார். அதாவது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோவை வைத்திருக்கிறார் அவர். அதில் ஒரே முக சாயல் கொண்ட இரண்டு சிறுமிகள் தோன்றி இதில் உண்மை யார் ஏஐ யார் என்று கேட்டுவிட்டு எது உண்மை, எது போலி என்பதையும் விளக்குகிறார்கள். இதன் மூலம் தனது வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை ஸ்ருதி தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

மேலும் இன்னொரு ஸ்டோரியில், 'ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கு உணர்வுகள் உண்டு. அனைத்தையுமே காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்' என்று தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X