விஜயா பிடிவாதத்தால் தவிக்கும் ரோகினி.. மனோஜ்க்கு முகத்தடி கொடுத்த மீனா.. ஜெயிச்சிட்டிங்களே முத்து

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதி மற்றும் ரவியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டும் என்பதற்காக விஜயா சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்க, அதை முத்து லாவகமாக கையாண்டு இருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா சமைத்து முடித்து விட்டு எல்லாரையும் சாப்பிட கூப்பிட விஜயா சாப்பிட வராமல் இருப்பதால் அண்ணாமலை விஜயாவை சாப்பிடக் கூப்பிடலயா என்று கேட்க, அதற்கு மீனா அத்தையை கூப்பிட்டேன். ஆனா அவங்க எனக்கு சாப்பாடு வேண்டாம் என்ற சொல்லிட்டாங்க என்று சொல்ல, அண்ணாமலை விஜயாவை வந்து சாப்பிட கூப்பிட அதற்கு விஜயா எனக்கு சாப்பாடு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்க என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial April 9th promo and episode full update

அதோடு அண்ணாமலை விஜயாவை மேலும் வற்புறுத்தி சாப்பிட கூப்பிட அதற்கு விஜயா நான் என் பிள்ளையை பார்க்காமல் சாப்பிட மாட்டேன். பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார். ஒரு பக்கம் மனோஜ் பசியில் தவிக்க வாமா சாப்பிடலாம் என்று கூப்பிட எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அதற்கு மனோஜ் ரோகினி இடம் சரிப்பா நாம சாப்பிடலாம் அம்மா பிறகு சாப்பிடுவாங்க என்று சொல்ல ரோகிணி ஆன்ட்டி சாப்பிடாம நாம எப்படி சாப்பிடுவது என்று மனோஜை தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு விஜயா பேசுவதற்கெல்லாம் முத்து கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதோடு தான் ரவியை சந்தித்து பேசிய விஷயத்தையும் ரவி ரெஸ்டாரண்டில் இருக்கும் விஷயத்தையும் சொல்கிறார். அதற்கு விஜயா அண்ணாமலையிடம் நீங்க போய் சாப்பிட்டு மாத்திரையை போடுங்க என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை நீ சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி ஆன்ட்டி சாப்பிடாமல் நாங்களும் சாப்பிட மாட்டோம் என்று மனோஜை பிடித்து வைத்துக்கொண்டு சொல்கிறார்.

Siragadikka aasai serial April 9th promo and episode full update

அதனால் முத்து அப்பா சாப்பிடாமல் அம்மாவை சாப்பிட வைக்க முடியாது என்று ஒரு பிளான் போடுகிறார். எல்லோரும் இப்படியே ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டே இருங்க. நான் இப்ப வந்துடுறேன் என சொல்லிவிட்டு வெளியே முத்து கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி டப்பிங் பேசி முடிக்கவும் உனக்கு சாப்பாடு வந்து இருக்கு என்று சவுண்ட் இன்ஜினியர் ஸ்ருதி இடம் சொல்ல, அங்கு ரூமுக்கு வந்து ஸ்ருதி பார்க்கும் போது சாப்பாடு உடன் ரவியும் இருக்கிறார்.

அதற்கு ஸ்ருதி உங்க ஹோட்டல்ல நான் சாப்பாடு தான் ஆர்டர் போட்டேன். செஃப் ஆர்டர் போடல என்று ஸ்ருதி சொல்ல அதற்கு ரவி அப்போ நான் போகவா? என்று கிளம்பி போக அதற்கு ரவியை தடுத்து நிறுத்துகிறார். பிறகு இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலில் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ரவி நான் எங்க அம்மா வீட்டுக்கு போகல ரெஸ்டாரண்டில் தான் இருக்கிறேன் என்று சொல்லி, நாம எப்போ மீண்டும் வீட்டுக்கு போகலாம் என்று கேட்ட,

Siragadikka aasai serial April 9th promo and episode full update

ஸ்ருதி நான் டப்பிங் பேசிட்டு நேரா வீட்டுக்கு தான போக போறேன் என்று சொல்ல, அதற்கு ரவி இல்ல நாம நம்மளோட வீட்டுக்கு போகணும் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் விஜயா சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க மனோஜ் ரொம்ப பசிக்கிறது என்று ரோகினியை சாப்பிட கூப்பிட ரோகிணி எனக்கு வேண்டாம் நீ போய் சாப்பிடு.... ஆன்ட்டியே சாப்பிடல, உனக்கு மட்டும் பசிக்குதா? என்று திட்ட...

அதற்கு மனோஜ் எனக்கும் பசிக்கல சும்மா ஒரு வாய் வார்த்தைக்காக சொன்னேன் என்று சமாளித்து விட்டு மீனாவிடம் குடிக்க தண்ணி கேட்க மீனா அதான் டைனிங் டேபிள்ல இருக்கே உங்களுக்கு கை இல்லையா? என்று திட்ட மனோஜ் நானே எடுத்துக்குறேன் என்று எடுத்துக் கொள்கிறார். மீனா மீண்டும் அண்ணாமலையை சாப்பிட கூப்பிட அவர் நீதான் காலையில் இருந்த எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்க நீ போய் சாப்பிடு என்று அண்ணாமலை சொல்ல அதற்கு மீனா யாருமே சாப்பிடாமல் நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial April 9th promo and episode full update

அந்த நேரத்தில் முத்து பக்கெட் பிரியாணியோடு வீட்டிற்குள் வருகிறார். டேபிளில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வைக்க சொல்லிவிட்டு பிரியாணியை இலை விரித்து கொட்டி வைக்க வீடு முழுக்க பிரியாணி வாசம் வருகிறது. அதை பார்த்து மனோஜ் எச்சில் ஊறி கொண்டு இருக்க, முத்து இது சாதாரண பிரியாணி இல்ல கோவில் பிரசாதம்.

நாம என்ன நடக்கணும்னு நினைச்சுகிட்டு இது சாப்பிடுறோமோ அது கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் எந்த கோவில்ல பிரசாதமா பிரியாணி தராங்க என்று கேள்வி கேட்கிறார். பிரியாணி வாசத்தை பார்த்து விஜயா மனம் தடுமாறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X