Siragadikka aasai serial: சிறகடிக்க ஆசை மீனாவிற்கு ஏற்பட்ட விபத்து.. ஐயய்யோ என பதறிய ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சிறகடிக்க ஆசை தொடர் காணப்படுகிறது. இதில் மீனாவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் கோமதி பிரியா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மற்றும் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்து வருகிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மனைவியாக மீனா கேரக்டரில் நடித்துவருகிறார் கோமதி பிரியா. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் மிகச்சிறப்பாக அமைந்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. இவர்களின் இந்த கெமிஸ்ட்ரியும் சீரியல் வெற்றிக் காரணமாக அமைந்துள்ளது.

விஜய் டிவியில் அதிக டிஆர்பி பெற்று சேனலின் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்குத் தள்ளி கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொடர் முதலிடத்தில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகச் சிறப்பாக ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குடும்ப குத்து விளக்காக சிறகடிக்க ஆசை சீரியலில் ஏழை பெண்ணாக நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

Siragadikka Aasai serial Meena got injury in shooting spot accident

சிறகடிக்க ஆசை தொடர்: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலில் இவர் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியலில் முத்துவிற்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். தன்னுடைய மாமியார் விஜயாவிற்கு முத்துவை பிடிக்காத நிலையில் மீனாவும் அவருக்கு வேண்டப்படாத மருமகளாகவே சீரியலில் காணப்படுகிறார். அதையும் மீறி அவர் மற்றவர்களின் அன்பை பெறும் வகையில் நடந்து வருவதாக சீரியலில் காட்டப்படுகிறது. ஏழைப் பெண்ணான மீனா பூக்கட்டி வியாபாரம் செய்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவனின் அன்பை பெற்று மீண்டும் பூக்கடை துவங்கியுள்ளார்.

300வது எபிசோட்: சமீபத்தில் இந்த சீரியலின் 300வது எபிசோட் ஒளிபரப்பானது. அதில் மீனா மற்றும் முத்துவிற்கு மீண்டும் திருமணம் நடப்பதாக காட்டப்பட்டது. முன்னதாக இவர்களது திருமணம் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்த நிலையில் தற்போது இருவரும் மனமொத்து மீண்டும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சீரியல்களில் நடித்து வருகிறார் கோமதி பிரியா. இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய காலில் அடிபட்டுள்ளதாக தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் தான் நடித்து வரும் சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டதாகவும் இது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட தனது முதல் விபத்து என்றும் கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.

மீனாவிற்கு ஏற்பட்ட காயம்: இதை பார்த்த ரசிகர்கள் Get well soon என்று பதிவிட்டு வருகின்றனர். மலையாளத்தில் கோமதி பிரியா நடித்துவரும் செம்பன்னீர் பூவு என்ற தொடரில் ரேவதி என்ற கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகிறார். அதில் இருசக்கர வாகனம் ஓட்டும்போது அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கோமதி பிரியா. அடுத்தடுத்த இவரது பதிவுகளால் இவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கோமதி பிரியாவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

பூவை வைத்து சமையல்: அடுத்தடுத்த மாடர்ன் டிரஸ்ஸில் இவர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே சிறகடிக்க ஆசை சீரியலில் சமையல் செய்வது போல காட்டுவதற்காக பாத்திரத்தில் பூவை நிரப்பி சமையல் செய்வது போல மீனா நடித்துள்ளார். அந்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள், இப்படித்தான் சூட்டிங் ஸ்பாட்டில் ஏமாற்றுகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். Flower dish by meena என்று அவர் இந்த வீடியோவில் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X