சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும்?.. நேர்மையா உழைக்கிறோம்.. வசனகர்த்தா பிரத்யேக பேட்டி

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கென்று தமிழ்நாடு முழுவதும் பலர் ரசிகர்கள், ரசிகைகளாக இருக்கிறார்கள். இதுவரை 700 எபிசோடுகள்வரை அந்த சீரியல் ஒளிபரப்பாகியிருக்கிறது. எபிசோடுக்கு எபிசோடு பரபரப்பும் விறுவிறுப்பும் இருப்பதால் மக்கள் ரசித்து பார்க்கிறார்கள். டிஆர்பி ரேட்டிங்கிலும் அந்த சீரியல்தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் சீரியலில் திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவுமான குரு சம்பத்குமார் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி மவுசு இருக்கும். குடும்பத்துக்குள் நடக்கும் எமோஷன்களை மைய சரடாக வைத்துக்கொண்டு இதுவரை பல சீரியல்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்திருக்கின்றன. மெட்டி ஒலி, கோலங்கள், சித்தி, நாதஸ்வரம், எதிர்நீச்சல் என அந்த சீரியல்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். சில குறைகள் சீரியலில் இருந்தாலும் தமிழ்நாட்டு இல்லத்தரசிகளை பொறுத்தவரை அதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாதது. ஒரு நாளினை தங்களுக்கு பிடித்தமான சீரியலை பார்த்து முடிப்பதற்கே விருப்பப்படுவார்கள்.

விஜய் டிவ் சீரியல்: ஒருகாலத்தில் சீரியல் என்றாலே சன் டிவிதான் என்றிருந்தது. அதில் ஒளிபரப்பான சீரியல்கள் எல்லாம் ஏகப்பட்ட எபிசோடுகளை பார்த்திருக்கின்றன. அதற்கு பிறகு மற்ற சேனல்களும் சீரியல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தன. அந்தவகையில் விஜய் டிவியும் சீரியல்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பியது. அப்படி அந்த சேனலில் வந்த சீரியல்களும் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இருப்பினும் இதற்கு முன்னர் அந்த சேனலில் ஒளிபரப்பான சீரியல்களைவிடவும் இப்போது ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

Siragadikka Aasai Serial Screenplay Writer Guru Sampathkumar Exclusive Interview

சிறகடிக்க ஆசை சீரியல்: ஆம் அந்த சீரியல்தான் சிறகடிக்க ஆசை. எஸ். குமரன் இயக்கத்தில் உருவாகிவரும் அந்த சீரியலுக்கு குரு சம்பத்குமார், ஆல்வின் பிரசாந்த் ராஜ், நந்தன் ஸ்ரீதான் உள்ளிட்டோர் திரைக்கதையும், வசனமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வெற்றி வசந்த் முத்து என்கிற கதாபாத்திரத்திலும், கோமதி பிரியா மீனா என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவர்தான் இந்த சீரியலில் லீடு ரோல்கள். இவர்களை தவிர்த்து ஆர்.சுந்தரராஜன், ஸ்ருதி நாராயணன், அனிலா ஸ்ரீகுமார், ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

டிஆர்பியில் நம்பர் ஒன்: எபிசோடுக்கு எபிசோடு இந்த சீரியலை சுவாரஸ்யத்தோடும், பரபரப்போடும் சீரியல் குழுவினர் கொண்டு செல்கிறார்கள். இதன் காரணமாக இதுதான் டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 700 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியிருக்கிறது அந்த சீரியல். இந்நிலையில் அந்த சீரியலின் திரைக்கதை ஆசிரிய மற்றும் வசனகர்த்தாவான குரு சம்பத்குமார் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.

குருவின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சிறகடிக்க ஆசை சீரியல் இதுவரை 700 எபிசோடுகள்வரை போயிருக்கிறது. மொத்தம் 1300 எபிசோடுகள்வரை போகும் என்று நினைக்கிறோம். அதற்கு பிறகு கதையின் தன்மை, சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பு உள்ளிட்டவைகளை பொறுத்து அடுத்தக்கட்டம் அமையும். எங்களை பொறுத்தவரை நாங்கள் நேர்மையாக வேலை செய்கிறோம். அப்படி செய்தாலே மக்களிடம் சீரியல் ஹிட்டாகிவிடும். ஐபிஎல் வந்துவிட்டது அதனால் சீரியல் பார்க்கமாட்டார்கள் எனவே அதற்கு தகுந்தவாறு எல்லாம் வேலை செய்யவில்லை.

முத்துவுக்கும், மீனாவுக்கும் திருமணம் நடந்தபோதிலிருந்தே இந்த சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன்றுக்கு வந்துவிட்டது. நான் எழுத்தாளராக மட்டுமின்றி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ரீ ரிலீஸ் விநியோக உரிமையையும் வாங்கியிருக்கிறேன். எனக்கு சிறு வயதிலிருந்தே எப்படியாவது சினிமாவில் கதை, வசனம் எழுதிவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதன் பலனாகத்தான் இப்போது இருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X