Gomathi Priya: ஆமாம் நான்தான் வாட்டர் பாக்கெட் மூஞ்சி.. சைடு பார்வையால் ரசிகர்களை கொள்ளை கொண்ட மீனா!
சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் நடிகை கோமதி பிரியா. மதுரையை சேர்ந்த கோமதி பிரியா, வேலை நிமித்தமாக சென்னை வந்து நடிக்கும் ஆசையில் அடுத்தடுத்த ஆடிஷன்களில் பங்கேற்றவர். தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியல் கேரக்டர்களான மீனா மற்றும் முத்து ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் கோபதாபங்கள், பிரச்சனைகள், சண்டைகள், அன்னியோன்யம், காதல், ரொமான்ஸ் என அனைத்தையும் ரசிகர்கள் மிகவும் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். ஆயினும் சில விமர்சனங்களையும் கோமதி பிரியா, இந்த மீனா என்ற கேரக்டர் மூலம் பெற்று வருகிறார். தன்னுடைய மாமியார் விஜயா எவ்வளவு திட்டினாலும் சுரணையே இல்லாமல் சமையல் கட்டிலேயே அவர் முடங்கி வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகை கோமதி பிரியா: சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கோமதி பிரியா. சென்னையில் வேலை நிமித்தமாக வந்த கோமதிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட அடுத்தடுத்த ஆடிஷன்களில் பங்கேற்று சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கி உள்ளார் இந்த மதுரை பொண்ணு. சினிமாவில் அடுத்தடுத்த ஆடிஷன்களில் இவர் பங்கேற்றாலும் முகத்தை இவ்வளவு அப்பாவித்தனமாக வைத்திருக்கும் கோமதி சினிமாவிற்கு செட்டாவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் அதை தனக்கான சிறப்பான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியல்: இந்த சீரியல் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கோமதி பிரியா. ஆனாலும் இந்த சீரியலில் விமர்சனங்களையும் இவர் சந்திக்க தவறுவதில்லை. சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய மாமியார் விஜயா எவ்வளவு திட்டினாலும் கொஞ்சமும் கோபப்படாமல் அடுத்தடுத்து கிச்சனே கதி என்று இருக்கும் மீனா கேரக்டரை ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்கு கொஞ்சம் கூட சுரணை இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த முத்து -மீனா: அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை மீனா கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து கேள்வி கேட்க வைத்துள்ளது. அவருக்காக நியாயத்தை கேட்கவும் செய்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கோமதி பிரியா. அடுத்தடுத்து ரீல்ஸ்கள், போட்டோ ஷூட்கள் போன்றவற்றை எடுத்து அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரியா புதிய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வாட்டர் பாக்கெட் மூஞ்சி: சமீபத்தில் வெளியாகியுள்ள தனுஷின் ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் மூஞ்சி பாடலை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தான் அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் காட்சிகளையும் ரீல்ஸ்களாக பதிந்துள்ளார். தொடர்ந்து தான் தான் வாட்டர் பாக்கெட் மூஞ்சி என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது, இதில் இணைக்கப்பட்டுள்ள சீரியல் காட்சிகளும் இடைடியில் ஓரக்கண்ணால் பார்க்கும் கோமதி பிரியாவின் ஜாடையும் மேலும் இந்த வீடியோவிற்கு அழகை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











