உலகை வழி நடத்தப்போவது எது... பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்... விஜய் டிவியில் பார்க்க தயாராகுங்க

சென்னை : விஜய் டிவியில் வரும் பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் என்றால் பட்டிமன்றம் இல்லாமலா. விஜய் டிவியில் வரும் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் சிறப்பான தலைப்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பேச உள்ளனர்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

இன்னும் இரண்டு தினங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பான வகையில் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா, ஓமிக்ரான் என ஒரு பக்கம் அச்சம் தரும் விஷயங்கள் இருந்தாலும் பொங்கலை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர்.

பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்

பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்

பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாக இருந்த பெரிய பட்ஜெட் படங்கள் பின்வாங்கியுள்ளன. அந்த இடத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் இடம்பெற்றுள்ளன. நாய் சேகர் உள்ளிட்ட படங்கள் தற்போது ரிலீசாக உள்ளன. இந்தப் படங்களும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம்.

டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்

டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்

இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வெளியில் செல்ல முடியாதவர்கள் அல்லது விருப்பம் இல்லாதவர்கள் பொங்கலை சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்களை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். அவற்றையும் சேனலை மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ளலாம். அதற்கும் ரசிகர்கள் ஆவலுடன்தான் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் டிவி இந்த பொங்கலுக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

களைகட்டும் பட்டிமன்றம்

களைகட்டும் பட்டிமன்றம்

பொங்கல் என்றாலே அனைத்து சேனல்களிலும் பட்டிமன்றம் களைகட்டும். அந்த வகையில் விஜய் டிவியிலும் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. காலை 9.30 மணிக்கு இந்த பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி பிரமோ வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

விஜய் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

இனி உலகை வழிநடத்தப் போவது வயல்வெளிகளா அல்லது வலைதளங்களா என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஈரோடு மகேஷ், மணிமேகலை உள்ளிட்டவர்கள் பேசவுள்ளனர். பிரமோவிலேயே இவர்கள் அசத்தலாக பேசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X