அரிமா... அரிமா... லோ பட்ஜெட் 2.ஓ... சூப்பராத்தான் இருக்காங்க ஷிவாங்கி!
சென்னை :சூப்பர் சிங்கர் போட்டியாளரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் கோமாளியுமான ஷிவாங்கி தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இவரது கோமாளித்தனங்கள் ரசிகர்களை இந்த சீசனிலும் கவர்ந்து வருகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன.

குக் வித் கோமாளி சீசன் 3
பிக் பாஸ் 5 சீசன்களை கடந்துள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3வது சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது சீசன் முக்கியமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது 3வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குக்குகளை விட கோமாளிகள் அதிக கவனம் பெற்று வருகின்றனர்.

சூப்பர் கோமாளி
இந்த கோமாளிகளில் ஷிவாங்கி கடந்த 2வது சீசனிலும் சரி தற்போது 3வது சீசனிலும் சிறப்பான கவனத்தை பெற்று வருகிறார். சூப்பர் சிங்கர் போட்டியாளரான இவர் தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமே அதிகமான கவனத்தை பெற்று வருகிறார். இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

குவியும் பட வாய்ப்புகள்
இந்த நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகளை பெற்று வரும் புகழ், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். ஆனால் ஷிவாங்கி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கெட்டப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

2.ஓ வில்லன் ரஜினி கெட்டப்
இதனிடையே இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் 2.ஓ படத்தின் வில்லன் ரஜினி கெட்டப்பை போட்டுள்ளார். இது 2.ஓவின் லோ பட்ஜெட், தலைவர் கெட்டப் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த கெட்டப்பிற்கு மாறும் வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.

வரவேற்பை பெறும் கோமாளி
எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் கோமாளி கெட்டப்புகள் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தப் புதிய கெட்டப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இதில் அவர் செய்யப்போகும் கோமாளித்தனங்களுக்காக ரசிகர்கள் இப்போதிலிருந்தே காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











