திருவண்ணாமலைக்கு போன ஷிவாங்கி.. யார் எல்லாம் கூட இருக்காங்கன்னு பாருங்க!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவாங்கி.
இவர் எதை செய்தாலும் அதை ரசித்து பார்க்கும் அளவிற்கு இவரது சேட்டைகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம் ஆனது.
இதையடுத்து பட வாய்ப்புகளையும் இந்த நிகழ்ச்சி பெற்றுத் தந்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்திருந்த டான் படம் வெளியானது.

நடிகை ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டியெல்லாம் பிரபலப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மற்றும் சீசன் 3 நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

வித்தியாசமான கெட்டப்புகள்
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு, அதன்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதற்காகவே ரூம் போட்டு யோசிப்பாரா என்று யோசிக்கும் அளவிற்கு இவரது கெட்டப்புகள் காணப்பட்டன. இந்த நிகழ்ச்சிமூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

குவிந்துவரும் பாடும் வாய்ப்பு
இதுமட்டுமில்லாமல் தனது பாடும் திறமையால் பல படங்களில் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து வருகிறது. தொடர்ந்து இசை ஆல்பங்களையும் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறார். இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்கச்சேரிக்காக சென்றிருந்தார். அங்கு அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

சுமூகமான உறவு
குக் வித் கோமாளி ஷோ மூலம் இணைந்த போட்டியாளர்கள் தற்போதும் தங்களிடையே சுமூகமான உறவை வைத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் முதல் ரன்னர் அப் தர்ஷன் ஆகியோருடனும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார் ஷிவாங்கி.

ஸ்ருதிகா -தர்ஷனுடன் திருவண்ணாமலை விசிட்
இந்நிலையில் ஸ்ருதிகா குடும்பத்தினர் மற்றும் தர்ஷனுடன் இணைந்து சிவாங்கி திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் அனைவரும் மிகவும் குதூகலமாக காணப்படுகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்
சிவாங்கி நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பாலா சரவணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் ஷிவாங்கி. தொடர்ந்து ஆர் கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











