Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி வந்த சிவகார்த்திகேயன்...எதுக்குன்னு தெரியுமா ?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பி வந்துள்ளதால் அனைவரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தந்துள்ளது. என்ன நடக்கிறது என புரியாமல் பலரும் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, பிறகு தனது கடின உழைப்பால் சினிமாவில் ஹீரோவாகி, இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் அதிக தொகை வசூலிக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் படங்களும் உள்ளன.
ஏகே
61
படத்தில்
இணைந்த
கேஜிஎஃப்
2
நடிகர்..
அஜித்தின்
ரசிகருக்கு
கிடைத்தது
அசத்தலான
ஜாக்பாட்!

விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 21 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த டான் படம் மே 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. அயலான் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே டான் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் விஜய் டிவி.,க்கே திரும்பி வந்துள்ளார்.

இதுக்கு தான் வந்திருக்காரா
அதிலும் விஜய் டிவி.,யின் மிக பிரபலமான ஷோ ஒன்றின் மூலம் அவர் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் விஜய் டிவிக்கு வந்திருப்பது தனது டான் படத்தின் ப்ரொமோஷனுக்காக தானாம். குக் வித் கோமாளி சீசன் 3 ல் வரும் வாரத்தில் ஒரு எபிசோடில் சிறப்பு விருந்திவனராக சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள போகிறாராம்.

ஓ...இது வேற நடந்திருக்கா
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல டான் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளும் குக் வித் கோமாளி ஷோவிற்கு வர போகிறார்களாம். சிவகார்த்திகேயன், குக் வித் கோமாளி செட்டிற்கு வந்திருக்கும் வந்திருக்கும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுக்கும் எபிசோடின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாம். விரைவில் இந்த எபிசோட் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இது முதல் முறையல்ல
சிவகார்த்திகேயன், குக் வித் கோமாளி ஷோவிற்கு வருவது இது முதல் முறையல்ல இதற்கு முன் கடந்த சீசனிலும் சிறப்பு விருந்தினராக வந்தார் சிவகார்த்திகேயன். ஃபைனல் போட்டிக்கு ஜட்ஜாக நடிகர் சிம்பு வந்திருந்தார். கடந்த முறை தனியாக வந்த சிவகார்த்திகேயன், இந்த முறை படக்குழுவையும் சேர்த்து அழைத்து வர போகிறார். இதனால் நிகழ்ச்சி செமயாக கலைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னது முடிய போகிறதா
சமீபத்தில் தான் குக் வித் கோமாளியில் வைல்டுகார்டு என்ட்ரியாக வந்த 2 போட்டியாளர்கள் செமி ஃபைனல்சிற்கு சென்றுள்ளனர். மீதம் இருப்பவர்கள் தங்களின் கோமாளிகளுடன் சமைக்க போகிறார்கள். குக் வித் கோமாளி சீசன் 3 முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ளது.