தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் 'டாக்டர்' படம்? எந்த சேனல்னு பாருங்க.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படம் தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் பல வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நடிகராக வலம் வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி ரிலீஸ்

கடந்த 9ஆம் தேதி ரிலீஸ்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

உலகம் முழுவதும் தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இதேபோல், யோகி பாபு, கிங்ஸ்லே, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறையாத கூட்டம்

குறையாத கூட்டம்

படம் ரிலீஸ் ஆகி 15 நாட்கள் ஆன நிலையில் திரையரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையவில்லை. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்துள்ள படங்களில் இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிவி சேனலில் ரிலீஸ்

டிவி சேனலில் ரிலீஸ்

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் தீபாவளிக்கு டாக்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 90 கோடி வசூல்

ரூ. 90 கோடி வசூல்

இதனிடையே டாக்டர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் ரிலீஸ் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X