பொங்கல் படங்கள்... விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!
என்னடா இது... பொங்கல்ல எங்க வந்தார் சிவ கார்த்திகேயன் என்று யோசிக்க வேண்டாம். இது டிவியில் வெளியான படங்களுக்கான போட்டி.
பொங்கல் பண்டிகையின்போது மூன்று தினங்களும் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சினிமாக்களைத்தான் ஒளிபரப்பிக் கொண்டாடின.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைக்கு வந்த சில மாதங்களே ஆன புதிய படங்கள்தான் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இவற்றுள் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை ஒளிபரப்பிய கலைஞர் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளது.

12.29 புள்ளிகள்
தை முதல் நாள் ஒளிபரப்பான இந்தப் படத்தைத்தான் அதிகப் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். கலைஞர் டிவிக்கு இதன் மூலம் 12.29 புள்ளிகள் கிடைத்துள்ளன.

தலைவா
விஜய் நடித்த தலைவா படத்தை சன் டிவி அதே தினத்தில் ஒளிபரப்பியது. இந்தப் படத்துக்கு 11.39 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

ராஜா ராணி
விஜய் டிவியில் ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி ஒளிபரப்பானது. பெரிதாக விளம்பரம் செய்யப்பட்ட இந்தப் படத்துக்கு அவ்வளவாக பார்வையாளர்கள் இல்லை. 7.36 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

பாண்டிய நாடு
விஷாலின் பாண்டிய நாடு படத்தை ராஜ் டிவி ஒளிபரப்பியது. இந்தப் படத்துக்கு 3.76 புள்ளிகள் கிடைத்தது. ஜீ ஒளிபரப்பிய ‘தேசிங்கு ராஜா' படத்திற்கு 3.66 புள்ளிகள் கிடைத்துள்ளன.

எந்திரன்
அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஏற்கெனவே பலமுறை ஒளிபரப்பான ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தை ஒளிபரப்பியது சன்டிவி., இந்தப் படம் 9.16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











