twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியின் சீதையின் ராமன்...ராவணனுடன் செல்ஃபி எடுத்த சீதா

    By Mayura Akilan
    |

    சென்னை: ராமனுடன் வனத்தில் இருக்கும் சீதையை வஞ்சகமாக ராவணன் கடத்தி சென்று இலங்கையில் சிறை வைப்பது சீதைக்கு கஷ்டமான விசயம்தான். ஆனால் சீதையின் ராமன் தொடர் நாயகி சீதை இந்த காட்சியை சந்தோசமாக நடித்து வருகிறாராம். காரணம் ராவணனாக நடிப்பது அவரது நண்பர் என்பதால் தற்போது படப்பிடிப்பு தளமே மகிழ்ச்சியாக இருக்கிறதாம்.

    ராமாயணத்தை எந்த கோணத்தில் சொன்னாலும், எந்த பகுதியை சொன்னாலும் அழகுதான். மகாபாரத இதிகாசத்தை விதவிதமாக காட்டிவந்த விஜய் டி.வி, அடுத்து சீதையின் ராமன் என்ற புதிய தொடரை ஒளிபரப்பி வருகிறது. சீதையின் இளமை காலத்தில் இருந்து இந்த கதை தொடங்குகிறது.

    வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்படையிலான கதை இது. சீதையின் பார்வையின் ராமன் எப்படி இருந்தார் என்பதுதான் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படும் பகுதி. ராமனுக்கும், சீதைக்கும் இடையலான அன்பு, உறவில் ஏற்ப்பட்ட விரிசல் பின்பு இணைதல் உள்ளிட்ட விஷயங்களை பேசும் கதை.

    விஜய் டிவியில் இதிகாச தொடர்

    விஜய் டிவியில் இதிகாச தொடர்

    ஸ்டார் பிளஸ் சேனலில் சியா கி ராம் என்ற பெயரில் ஒளிபரப்பான இந்தி தொடரின் தமிழாக்கம் இது. கடந்த ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இந்தியின் முன்னணி டி.வி நடிகர் ஆஷிஷ் ஷர்மா ராமராகவும், மத்திரிகாஷி முண்டே சீதாவாகவும் நடித்துள்ளனர்.

    சீதையின் ராமன்

    சீதையின் ராமன்

    சீதா ராமர் திருமணம் முடிந்து தற்போது கதை அயோத்தியில் நடைபெற்று வருகிறது. முக்கிய திருப்பங்கள் நிறைந்த எபிசோடுகள் இப்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பரதனும் சத்ருகுணனும் கெகேயத்திற்கு சென்றிருக்கும் தருணம் இங்கு அயோதியில் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என தசரத மகாராஜா தீடீர் முடிவு எடுக்கிறார். யாருக்கும் சொல்லாமல் ஏற்பாடுகளை விரைவில் முடிக்க நினைக்கிறார்.

    மந்திரையின் உபதேசம்

    மந்திரையின் உபதேசம்

    தசரதரின் முடிவை அறிந்த லஷ்மணன் மற்றும் ராணியர் இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இதன் நடுவில் கைகேயியின் தாதி மந்திரை இச்செய்தியினை கேட்டு பரதனுக்கு இழைக்கப்படும் அநீதி இது என எண்ணி வெகுண்டு எழுகிறாள். ராமனுக்கு ராஜ்ஜியபிஷேகம் நடைபெற கூடாது என சபதம் எடுத்து, கைகேயியிடம் சென்று துர்உபதேசம் செய்கிறாள். முதலில் மந்திரையை கோபித்துக்கொள்ள்ளும் கைகேயி, பின் மெல்ல மெல்ல அவளது சொல்லிற்கு செவிசாய்க்கிறாள்.

    ராணியரின் மகிழ்ச்சி

    ராணியரின் மகிழ்ச்சி

    அடுத்து கோசலை மற்றும் சுமித்திரை இரு ராணியர்களும் தசரத மகாராஜாவிடம் ஏன் இந்த சுபச் செய்தியினை கூறவில்லை என வினவுகின்றனர். பிறகு விமர்சியாக ராமனது ராஜ்ஜாபிஷேகம் நடை பெற துவங்குகிறது. இதை பொறுக்காத கைகேயி அங்கு செல்லாமல் மன்னர் தனது அறைக்கு வரும் வரை காத்திருக்கிறாள்.

    கையேயி கேட்ட வரங்கள்

    கையேயி கேட்ட வரங்கள்

    கைகேயியை அழைத்துவர தசரத மகாராஜாவே புரப்படுகிறார். சபையில் அனைவரும் இருவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் கைகேயி மகாராஜாவிடம் இரு வரங்கள் பற்றி நினைவுபடுத்தி அதை இப்போழுது பெருகிறேன் என்கிறாள்.

    துடிக்கும் தசரதர்

    துடிக்கும் தசரதர்

    அதை என்னவென கேட்காது திரும்பவும் ராமனின் மேல் ஆணையாக நீ கேட்பதை நிறைவேற்றுவேன் என தசரதர் கூறிவிடுகிறார். இதை பயன்படுத்தி தனது புதல்வன் பரதனே அயோத்தி ஆளவேண்டும் எனவும், ராமன் ஈரேழு வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும் எனவும் கேட்பராள். இதை தாங்காது தசரதர் துடித்துப்போகிறார். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த உரையாடல் நடைபெறுகிறது.

    கைகேயியை கண்ட ராமன்

    கைகேயியை கண்ட ராமன்

    மகாராஜா சபை வராதது கண்டு அமைச்சரை அனுப்ப, அவர் திரும்பி வந்து மகாராஜா ராமனை தனியாக அழைத்துவரும்படி கூறியதாக கூறி ராமனை கைகேயி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார். அங்கு அலங்கோல நிலை கண்டு, மகாராஜா கீழே விழுந்திருப்பதை பார்த்து ராமர் மனது கவலை கொள்வார்.

    வனவாசம் செல்ல ஆணை

    வனவாசம் செல்ல ஆணை

    ஏன் என்ன நேர்ந்தது என கைகேயியிடம் கேட்க, அதற்கு கைகேயி தான் வேண்டிய இரு வரங்களை பற்றி கூறுவாள். இதை கேட்டு ஒரு வார்த்தை எதிர்த்து பேசாத ராமர் தான் தனது தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதாக கூறி அங்கிருந்து விடைபெற்று சபை செல்கிறார்.

    பட்டாபிஷேகத்திற்கு தடை

    பட்டாபிஷேகத்திற்கு தடை

    சபையில் அனைவரின் முன்னும் பேசும் ராமன், தான் ராஜ்ஜியாபிஷேகம் செய்து கொள்ள தகுதியற்றவனாகினேன் என்பவற்றை மட்டும் சபையோர் முன் கூறி வந்திருந்தோர் அனைவருக்கும் விடை கொடுப்பார். பிறகு ராணியர் இருவரும் கைகேயினுடைய சூழ்ச்சிதான் இது என அறிந்து மிகவும் வேதனை அடைவர்.

    தாமரை போன்ற முகம்

    தாமரை போன்ற முகம்

    ராமன் முகம் பார்த்த கைகேயி சற்று தடுமாறுவது போல் நடித்திருப்பது அவருடைய பாசத்தை காட்டுகிறது. தனது புத்திரன் தன்னை விட்டு நீங்கிவிடுவான் என்ற எண்ணமே தசரதரால் தாங்கிக்கொள்ள முடியாமல் தள்ளாடுவது புத்திர மோகத்தை அனைத்து தந்தையின் சார்பாகவும் வெளிபடுத்தியிருக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை நிரூபித்த ராமன், வனவாசம் செல் என்று சிற்றன்னை கூறியபோது மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு சிறந்த உதாரண புருஷன் என்று நிரூபித்துள்ளார்.

    வனவாசம் செல்லும் ராமன் சீதை

    வனவாசம் செல்லும் ராமன் சீதை

    தமிழில் இப்போதுதான் வனவாசம் செல்லும் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் ராமன் இருக்க, ராமன் இருக்கும் இடமே அயோத்தி என்று சீதையும் ராமனுடன் புறப்பட தயாராகிறாள்.

    ராவணன் சீதை

    ராவணன் சீதை

    இந்தியில் ஒளிபரப்பாகும் சியா கி ராம் வனவாசம் பகுதியில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்தி செல்லும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு நிலையத்தில் ராவணன் கார்த்திக் ஜெயராமும், சீதை மத்திரிகாஷி முண்டேவும் நண்பர்களாகிவிட்டார்களாம்.

    செல்ஃபி வித் ராவணா

    செல்ஃபி வித் ராவணா

    படப்பிடிப்பு தளத்தில் நண்பர் கார்த்திக் உடன் நடிப்பது உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார் சீதை. ராவணனும், தனது தோழியான சீதை உடன் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். ராவணனுடன் செல்ஃபி எடுத்து அதை பகிர்ந்துள்ளார் சீதா. இதிகாச கதையை மாத்திராதீங்கப்பா.

    English summary
    Actress Madirakshi, who is currently seen playing the role of Sita in “Siya Ke Ram”, is glad that she is getting time to shoot with her friend and actor Karthik Jayaram, who essays the role of Raavan in the mythological saga. As per the ongoing track of the Star Plus show, Raavan has kidnapped Sita and taken her to his kingdom.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X