ராஜ்டிவி காம்பியராக களமிறங்கும் நடிகை லைலா
சிரிப்பழகி லைலா ராஜ்டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நந்தா, பிதாமகன், மவுனம் பேசியதே, தீனா, தில் படங்களில் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லைலா.
தமிழ் சினிமாவில் நல்ல பீக்கில் இருக்கும்போதே 2006ம் ஆண்டு மெஹடின் என்பரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இப்போது இரண்டு குழந்தைக்கு தாய்.

சிரிப்பழகி லைலா
லைலா கண்ணை மூடி சிரிக்கும் சிரிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அப்பாவித்தனமாக அமைந்த காரணத்தால் லூஸ் ஹீரோயின் என்று பெயரெடுத்தவர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு
7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சென்னை வந்திருக்கிறார் லைலா. சினிமாவில் நடிக்க அல்ல டிவியில் காம்பயரிங் செய்யப்போகிறார்.

சூப்பர் டான்சர்
ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் டான்சர் என்ற நடன நிகழ்ச்சியை காம்பியரிங் பண்ணப்போகிறார். இதற்கான ஒத்திகையில் பங்கேற்க சென்னை வந்திருக்கிறார்.

பட தயாரிப்பாளரா?
சமீபத்தில்கூட லைலா மீண்டும் நடிக்கப்போகிறார். படம் தயாரிக்கப்போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதனை லைலா மறுத்தார். இப்போது அவர் சின்னத்திரைக்கு வந்துள்ளார். சின்னத்திரை மூலம் அப்படியே மீண்டும் பெரிய திரைக்கும் வரலாம் என்று கூறப்படுகிறது.

வெள்ளித்திரை நாயகிகள்
சினிமாவில் நடித்த ராதிகா, குஷ்பு, மீனா, சங்கீதா, சுகன்யா, ரோஜா போன்ற நடிகைகள் சின்னத்திரையில் சீரியல், காம்பயரிங், நடுவர் என செட்டிலாகிவிட்டனர். அந்த வரிசையில் இப்போது லைலாவும் புதிதாக வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











