சன் டிவி கேம் ஷோவில் சிநேகா?
ரோஜா, சிம்ரன், லைலா வரிசையில் இப்போது நடிகை சிநேகாவும் சின்னத்திரையில் கால் பதிக்க உள்ளார்.
பிரசன்னா உடன் காதல் திருமணத்திற்குப் பின்னர் விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்தார் நடிகை சிநேகா.
தற்போது சன் டிவியில் கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிக்குடித்தனம்
காதல் திருமணம் செய்துகொண்ட சிநேகாவும், பிரசன்னாவும் இப்போது தனிக் குடித்தனம் நடத்தி வருவது சினிமா வட்டாரமே தெரிந்த செய்திதான்!

விளம்பரங்கள் மட்டுமே
சிநேகா, பிரசன்னா இருவருக்குமே சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் கைவசம் இல்லை. விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். அதனால் வருமானமும் கம்மி!

இதுவரை மறுப்பு
இதுநாள் வரை பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்த அழைப்புகளை வேண்டாம்... முடியாது... என்று இதுவரை மறுத்து வந்தார் சிநேகா!

சன் டிவியில்
இப்போது "சன் டிவி'யில் ஒளிபரப்பாக இருக்கும் மிகப்பெரிய ""கேம் ஷோ'' ஒன்றினை தொகுத்து வழங்க உள்ளாராம் சிநேகா. பளபளக்கும் பட்டுப் புடவையிலும் ஜொலி ஜொலிக்கும் நகைகளிலும் மின்னலடிக்கிறார்.

பிரம்மாண்டமான அரங்கம்
இதற்காகவே சன் டிவி படப்பிடிப்பு அரங்கில் பிரம்மாண்டமான "செட்' போடப்பட்டு கடந்த சில வாரங்களாக சூட்டிங் நடைபெற்று வருகிறதாம். வெள்ளித்திரையில் இருந்து விடைபெற்று விட்ட சிநேகாவை இனி சின்னத்திரை "கேம் ஷோ'! மூலம் கண்டு ரசிக்கலாம் ரசிக பெருமக்கள் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











