சினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா?
சென்னை: சினேகன் உண்மையை சொன்ன போது சீறிய பிக் பாஸ் போட்டியாளர்கள் கமல் சொன்னால் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போலியாக இருப்பதாக பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். கமல் ஹாஸன் கூட இதை பிக் பாஸ் மேடையில் கூறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சினேகன் போலியாக இல்லாமல் நீங்கள் நீங்களாக இருங்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வைஷ்ணவி
போலியாக இருக்க வேண்டாம் என்று சினேகன் கூறியதை கேட்டு ரம்யாவும், வைஷ்ணவியும் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார்கள். அந்த ஆளு யாரு நம்மை ஜட்ஜ் பண்ண. நாம் போலியாக இருப்பதை அவர் பார்த்தாராக்கும் என்றெல்லாம் கோபத்தில் வார்த்தைகளை விட்டனர். அவர்கள் போலியாக இருப்பது அவர்களுக்கே தெரிந்தும் குதித்தார்கள்.

பிக் பாஸ்
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் யாரெல்லாம் போலியாக இருக்கிறார்கள் என்று மீண்டும் கேட்டார். உடனே ஆளாளுக்கு அடுத்தவரை கை காட்டு வண்டி, வண்டியாக புகார் தெரிவித்தார்கள். அவர்கள் எந்தெந்த நேரங்களில் எல்லாம் ரொம்பவும் போலியாக இருக்கிறார்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு கமலுக்கு கண்ணை கட்ட வைத்தார்கள்.

தப்பு இல்லையே
போலியாக நடந்து கொள்வது தெரிந்தும் சினேகன் மீது கோபப்பட்டது தவறு தானே. எங்க கவிஞர் சினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். வீட்டில் உள்ள அனைவருமே போலியாக தான் நடிக்கிறார்கள். யாருமே அவர்களின் உண்மையான முகத்தை கேமராக்களுக்கு முன்பு காட்டுவது இல்லை என்று சென்றாயன் கூறினார்.

போலி
டேனி போலியாக நடிப்பது பார்வையாளர்களுக்கு தெரியும். இந்நிலையில் அவர் போலியாக இருப்பதாக சக போட்டியாளர்களே கமல் ஹாஸனிடம் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனில் ஜூலியை போலி என்றதற்கு இந்த சீசனில் வீடு முழுக்க போலியாகத் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











