twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பெண் போட்டியாளர்களால் சினேகனுக்கு நடந்த கொடுமையை பார்த்தீங்களா?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த இடத்தில் சினேகனுக்கு இப்படி நடந்துவிட்டதே.

    பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் வந்த பிறகு தான் நிகழ்ச்சி களை கட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக சினேகனுக்கு செமயாக ஒர்க் அவுட் ஆகிறது. ஐஸ்வர்யா சினேகனுக்காக பாட்டு பாடி அவருடன் சேர்ந்து டூயட் ஆடினார்.

    இதில் அசந்து போன சினேகன் ஐஸ்வர்யாவை தூக்கிவிட்டார்.

    சினேகன்

    சினேகன்

    பலூன் டாஸ்கின்போது சினேகன் தீவிரமாக விளையாடினார். அவர் எங்கு சென்றாலும் அவரை சுற்றி பெண் போட்டியாளர்களாக உள்ளனர். பலூன் டாஸ்கிலும் அப்படித்தான். டாஸ்க் முடிந்த பிறகு பார்த்தால் சினேகனின் மார்பு, முதுகு, கைகளில் நகக்கீரல்களாக இருந்தன. பெண் போட்டியாளர்கள் அவரின் உடம்பில் கோடு போட்டுவிட்டனர்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    இந்த வயதான காலத்தில் ஓட முடியாது, நான் வர மாட்டேன் என்று சொன்னேனே பிக் பாஸ் என்றார் சினேகன். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போட்டியாளர்களிலேயே சினேகன் தான் செமயாக என்ஜாய் பண்ணுகிறார். ஷாரிக் கிளம்பிய பிறகு சிங்கிளாக சுற்றிய ஐஸ்வர்யா வேறு சினேகனை சுற்றி சுற்றி வருகிறார். இது எல்லாம் எங்கு போய் முடியப் போகுதோ?

    ஆர்த்தி

    ஆர்த்தி

    பலூன் டாஸ்கின்போது சுஜா வருணி, ஆர்த்தியிடம் சிக்கிய யாஷிகாவால் ஒன்னுமே செய்ய முடியவில்லை. அவரை சக்கையாக பிழிந்து எடுத்துவிட்டனர். சுஜாவும், ஆர்த்தியும் யாஷிகாவை பலூனை எடுத்துச் சென்று போர்டில் ஒட்ட விடாமல் தடுத்ததை பார்த்து சிரித்து சிரித்து முடியவில்லை. நீங்கள் நினைத்து போன்று நிகழ்ச்சி சூடுபிடித்துவிட்டது பிக் பாஸ்.

    காயம்

    காயம்

    அதே பலூன் டாஸ்கின்போது விஜிக்கு கழுத்தில் அடிபட்டது. சிறிது நேரம் தரையில் படுத்திருந்த பிறகு அவருக்கு சரியாகிவிட்டது. டாஸ்க் என்று வந்தாலே கள்ள ஆட்டை ஆடும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் விருந்தினர்களை பார்த்து பயந்துவிட்டார்களோ என்னவோ ரொம்பவே சமத்தாக இருந்தனர். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நேற்றைய டாஸ்கில் இரண்டு பேரும் ஓவர் ஆட்டம் போட்டிருப்பார்கள்.

    English summary
    Bigg Boss 2 Tamil guest Snehan got injured while participating in balloon task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X