பிக் பாஸில் சினேகன் பயந்தது போன்றே நடந்துவிட்டது

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் எது நடக்கக் கூடாது என்று சினேகன் நினைத்தாரோ அது நடந்துவிட்டது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யா அறிவிக்கப்படுவார் என்றே பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரித்விகாவை வின்னராக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பாவம் கோல்டன் டிக்கெட் வாங்கிய ஜனனி ரன்னர் அப் ஆகக்கூடும் என்று கூறப்பட்டது.

கோல்டன் டிக்கெட்

கோல்டன் டிக்கெட்

கோல்டன் டிக்கெட் வாங்கி ஃபினாலே வாரத்திற்கு வந்தவர் ஐனனி. ஆனால் அவருக்கு வின்னர் ஆகும் வாய்ப்பு இல்லை. அவருக்கு ரன்னர் அப் கூட கிடைக்காமல் போய்விட்டது. ஜனனிக்கு முதல் 3 இடங்களில் ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதால் அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சினேகன்

சினேகன்

கடந்த சீசனின் முதல் கேப்டன் சினேகன். கோல்டன் டிக்கெட் வாங்கிய அவருக்கு ரன்னர் அப் தான் கிடைத்தது. இந்த சீசனின் முதல் கேப்டன் ஜனனிக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்தது. பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக வந்த சினேகன் தன் நிலைமை ஜனனிக்கும் வந்துவிடக் கூடாது என்று கமல் ஹாஸன் முன்பு கூறினார்.

ராசியா?

ராசியா?

பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்தால் அவர் நிச்சயம் வெற்றி பெற மாட்டார் என்ற ஒரு சென்டிமென்ட் உருவாகிவிட்டது. சினேகன் எது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தாரோ அதுவே நடந்துவிட்டது. ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்த விஜயலட்சுமி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

104 நாட்கள்

104 நாட்கள்

104 நாட்கள் பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து அனைத்து டாஸ்குகளையும் செய்தாலும் ஜனனி மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டார். இடையே அவர் இருக்கும் இடம் தெரியாமல் ஓரமாக ஒதுங்கி இருந்தார். இதை கமல் ஹாஸன் கூட ஜனனியிடம் கூறினார். ஆனாலும் பலனில்லை. எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று இருந்ததாலோ என்னவோ ஜனனி பார்வையாளர்களை கவரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X