twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு

    By Siva
    |

    Recommended Video

    பிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு- வீடியோ

    சென்னை: சினேகன் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் லக்சுரி டாஸ்கில் ஆசிரியராக வந்து மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்றுக் கொடுத்தார் முன்னாள் போட்டியாளர் சினேகன்.

    சினேகனை பார்த்ததும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர், பின்னர் யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.

    ஆண்கள்

    ஆண்கள்

    வகுப்புக்கு வந்த உடன் ஆண்கள், பெண்கள் சேர்ந்து அமரக் கூடாது என்று கூறி மகத்துக்கு ஆப்பு வைத்தார் சினேகன். சாப்பிட்ட தட்டை உடனே கழுவி வையுங்கள், காயவிடாதீர்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் சினேகன். அது யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. வந்துட்டான் பெருசா அட்வைஸ் பண்ண என்பது போன்று பார்த்தார்கள்.

    அறிவுரை

    அறிவுரை

    இந்த வீட்டில் உள்ள யாரும் நீங்களாகவே இல்லை. ஒரு நாளில் ஒரு வேளையாவது அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார் சினேகன். என்னை விட்டால் நான் மீண்டும் இஙக்கு 100 நாட்கள் இருப்பேன் என்றார் சினேகன். இதை கேட்டு பார்வையாளர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. மறுபடியும் முதலில் இருந்தா வேணாம்யா என்றார்கள்.

    ஆர்த்தி

    ஆர்த்தி

    முன்னாள் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, நமீதா உள்ளிட்டோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் சினேகனோ மீண்டும் 100 நாட்கள் இருக்க தயார் என்கிறார். என்ன சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் பார்ட் 2வா?

    வைஷ்ணவி

    வைஷ்ணவி

    நாங்க நாங்களாக இல்லை என்பது உனக்கு எப்படி தெரியும். நீ சொல்லி நாங்க ஏன் மாற வேண்டும்? நீ யாரு எங்களை ஜட்ஜ் பண்ண என்று சினேகன் பற்றி டேனியிடம் கூறினார்கள் ரம்யா, வைஷ்ணவி.

    தடவியல்

    தடவியல்

    பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்யவில்லை. தடவியல் நிபுணர் என்ற அவரின் பெயர் இந்த சீசனில் மகத்துக்கு சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Snehan who visited Bigg Boss 2 Tamil house has advised the housemates and told that he is ready to spend yet another 100 days in the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X